கீழடியில் கடந்த  2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2ஆம் மற்றும் 3 ஆம் கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைத் தொடர்ந்து 4 முதல் 7ஆம் கட்டம் வரையிலான அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு  பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை அழகாய்வுப் பணி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






கீழடியில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாசிகள், கற்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, விளையாட்டு சில்லுகள் என் ஏகப்பட்ட பொருட்கள் கிடைத்து வருகின்றன. 8 ஆம் கட்ட அகழாய்வில் 400க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது கீழடியில் மூன்று குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  கீழடியில் ஒரு குழியில் தோண்டும் போது 4 அடி ஆழத்தில பழங்காலத்தில்  ஆபரண பொருட்களாக பயன்படுத்திய கருப்பு, சிவப்பு, நீலம், என கண்கவரும் வண்ணங்களில் 7 பாசிமணிகள் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆய்வு செய்யும் பட்சத்தில் இதன் முழு விவரம். தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் கூறினார்கள்.









அதே போல் ஆராய்ச்சியளார்கள் தார்பாயால் மூடப்பட்டிருந்த ஒரு குழியை திறந்து அகழாய்வு செய்ய உள்ளே இறங்கிய‌ போது கொடிய விஷம் கொண்ட சுமார் 3 அடி நீளம் கொண்ட கருப்பு நிறம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு உள்ளே இருந்துள்ளது. உடேன பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆராய்ச்சியாளர்கள் அங்கு வேலை செய்யும் ஊழியர்களை வைத்து அந்த பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர். இது மாதிரி அடிக்கடி கீழடி அகழாய்வில் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அடிக்கடி வருவதாகவும் கூறினார்கள். இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.