திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சந்தைப்பேட்டையை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் நவீன்குமார்(35). இவருக்கு சாலையூர் நால்ரோட்டை சேர்ந்த விஜயசாந்தி(30) என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இவருக்கு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை உள்ளது. நவீன்குமார் வேடசந்தூரில் உள்ள தனியார் இரும்பு கடையில் லோடுமேனாக பணியாற்றி வருகிறார்.




கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நவீன்குமாருக்கும் விஜயசாந்திக்கும் சண்டை ஏற்பட்டு விஜயசாந்தியை நவீன்குமார் தாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோடாங்கிபட்டி அருகே காட்டுப் பகுதியில் நவீன் குமார் கழுத்து அறுபட்டு மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்து கிடந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Diwali Special Show: அசத்தலாக களைகட்டும் தீபாவளி..தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி....!


இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் வேடசந்தூர் ஆய்வாளர் பாலமுருகன் விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டு கிடந்த நவீன்குமாரின் மனைவி விஜயசாந்தியிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். இந்த நிலையில் போலீசார் கேட்கும் கேள்விக்கு முன்பின் முரணாக பதில் அளித்துள்ளார் விஜயசாந்தி மேலும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். நள்ளிரவில் கொலை சம்பவம் அரங்கேறியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




பழனி பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வண்டிவாய்க்கால். இப்பகுதியில் உள்ள ஹோட்டல் கடை ஒன்றிற்கு இருசக்கர‌ வாகனத்தில் வந்த நபர்‌ ஒருவர் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனக்கு அன்பளிப்பாக பணம் தருமாறும் கேட்டுள்ளார்.




இந்நிலையில் அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் மர்மநபரிடம் நீங்கள் யார்?எந்த அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள்? என கேள்விகள் கேட்டதை அடுத்து‌ சுதாரித்து கொண்டு அந்த மர்மநபர் செல்போன் பேசுவதுபோல் நடித்துக்கொண்டே வெளியே சென்று அங்கு இருசக்கரவாகனத்தில் நின்றிருந்த நபருடன் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை   அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Gotabaya Rajapaksa : மனித உரிமை மீறல் வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சம்மன்..


மேலும் அதிகாரிகள் பெயரை சொல்லி யாராவது பணம் கேட்டால் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்தனர். பழனி பகுதியில் அதிகாரிகள் பெயரைச் சொல்லி வசூல் வேட்டையில் ஈடுபட்ட மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண