கொரோனா பரவல் காலக்கட்டத்தில் நோய் தொற்றும் உச்சத்தில் இருந்த போது ஏராளமான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு விதிமுறைகள் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்த நிலையில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் தற்போது ஒவ்வொன்றாக இயக்கப்பட்டு வருகிறது. இதில் நெல்லை, ஈரோடு பயணிகள் ரயிலும் தற்போது இயங்க தொடங்கியுள்ளது. இந்த ரயில் முன்பு நெல்லை, ஈரோடு, மயிலாடுதுறை இணைப்பு ரயிலாக இயக்கப்பட்டது. அந்த ரயில் திண்டுக்கல்லுக்கு வந்தடைந்தது. ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கான பெட்டிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இயக்கப்பட்டன.
ஆனால் தற்போது நெல்லை - ஈரோடு இடையே ஒரு பாசஞ்சர் ரெயிலும், திண்டுக்கல், மயிலாடுதுறை இடையே ஒரு புதிய பயணிகள் ரயிலும் இயக்கப்படுகிறது. நெல்லை, ஈரோடுக்கிடையேயான ரயில் சேவையானது தினமும் காலை 11.12 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தடையும். 11.15 மணிக்கு ஈரோட்டுக்கு புறப்பட்டு செல்கிறது. எனவே அந்த ரயிலில் வரும் மயிலாடுதுறை பகுதிகளை சேர்ந்த பயணிகள், திண்டுக்கல்-மயிலாடுதுறை ரயிலுக்கு மாறி செல்லலாம். இதற்கு வசதியாக திண்டுக்கல்-மயிலாடுதுறை ரெயில் 11.30 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்படுகிறது.
Srilankan Crisis : இலங்கையில் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் ? மக்களின் கோரிக்கைகள்தான் என்ன?
இந்த நிலையில் திண்டுக்கல், மயிலாடுதுறை பயணிகள் ரயில் திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்பட்டது. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணம் செய்தனர். திண்டுக்கல், மயிலாடுதுறை இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பயணிகள் கூறினர். இந்த ரெயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி, மஞ்சத்திடல், திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய ரயில் நிலையங்களில் அந்த ரயில் நின்று செல்கிறது.
Gotapaya To Maldives : மாலத்தீவுகளுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச...நடந்தது என்ன?
அதேபோல் மறுமார்க்கத்தில் காலை 11.25 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு (ஈரோடு-நெல்லை ரயிலுக்கு முன்பு) திண்டுக்கல்லை வந்தடைகிறது. இதனால் மயிலாடுதுறை, திண்டுக்கல் ரயிலில் வரும் நெல்லை, மதுரை பயணிகள் எளிதாக ஈரோடு,நெல்லை ரயிலில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்