திண்டுக்கல்லில், பழைய கரூர் சாலையில் உள்ள ஜி.எஸ்.நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 57). இவர் திண்டுக்கல் நாகல்நகரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27-ந்தேதி ரவிச்சந்திரன் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது.


DMK : தி.மு.க.விற்கு மீண்டும் தலைவரானார் மு.க.ஸ்டாலின்..! துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம்..! தொண்டர்கள் உற்சாகம்




இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன், வீட்டுக்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதனுள் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரம் திருடுபோகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்கு ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்தார்.


Crime: வாயில் கம்பியை திணித்து கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர்..! குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்.


அதன்பேரில் உதவி காவல் துணை கண்காணிப்பாளர் அருண் கபிலன், தாலுகா காவல் ஆய்வாளர் கஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், ரவிச்சந்திரனின் வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.


Jobs Alert : சட்டம் படித்தவரா நீங்கள்? மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? எப்படி விண்ணப்பிப்பது..?


Jobs Alert : சட்டம் படித்தவரா நீங்கள்? மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? எப்படி விண்ணப்பிப்பது..?


இதற்கிடையே மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு, அந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் அந்த நாய் ஓடியது. யாரையும் அடையாளம் காட்டவில்லை. அதேபோல் கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர். நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகைகள், பணம் திருடுபோன துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண