மதுரை மாவட்டம் அழகர்கோயிலின் உப கோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் போது 108 திவ்யதேசங்களில் ஒன்றான அழகர் மலையிலிருந்து கள்ளழகர் வேடம் தரித்து மதுரையை நோக்கி வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக சுந்தர்ராஜ பெருமாள் வருகை தரும் நிலையில் தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய இந்த கோய்லில் இருந்து தான் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழக வேடம் தரித்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார் இத்தகைய சிறப்பு பெற்ற இந்த ஸ்தலமாகும்.
இந்நிலையில் அன்னப் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் பெருமாள் தெப்பத்தில் காலை ஒரு முறையும் மாலையில் மின்னொளி அலங்காரத்தில் மூன்று முறையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி மாதம் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழா முக்கியமானதாகும் .
அந்த வகையில் சிறப்பு பெற்ற இவ்விழா கடந்த 27- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதையடுத்து தினமும் பெருமாள் தாயார்களுடன் தினமும் அன்னம், சிம்மம், அனுமார், கருடன், சேஷ, குதிரை வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக வெங்கடாஜலபதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினார் .
அங்கு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து பக்தர்களின் " கோவிந்தா " கோஷம் முழங்கிட தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட அன்னபல்லக்கில் தாயார்களுடன் பெருமாள் எழுந்தருளினார். காலையில் ஒரு முறையும், மாலையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மூன்று முறையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். தெப்ப திருவிழாவை காண மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் "கோவிந்தா" கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பராமரிப்பு பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் - முழு விவரம்