திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாச்சலூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கடந்த வாரம் புதன் கிழமை அன்று 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி உடல் கருகிய நிலையில் பள்ளியின் சமையலறை வளாகத்தில் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி பரிதமாக உயிரிழந்தது. இது குறித்து தாண்டிக்குடி காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்,




இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தற்போது வரை காவல் துறையினர் கண்டு  பிடிக்கவில்லை என குற்றம்சாட்டியும், சிறுமி உயிரிழந்த தினம் பள்ளிக்கு வருகை புரிந்த 3 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கொடைக்கானல் பகுதியை சேர்ந்த சுமார் 5 ஊர் கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.




மதுரையில் 110ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இடிபாட்டில் சிக்கி ரோந்து பணியில் இருந்த காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகவில்லை எனவும் அடித்து துன்புறுத்தியதற்கான உடலில் எந்த ஒரு காயத்திற்கான அடையாளம் இல்லை எனவும் காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுமி இறப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் காவல்துறையினர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விசாரணை செய்து வருகின்றனர்.




பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்


இது ஒரு புறம் இருக்க கடந்த ஒரு வாரமாக சிறுமியின் இறப்பு குறித்து நீதி கிடைக்க வேண்டுமென்று திண்டுக்கல், தேனி உட்பட்ட மாவட்டங்களில் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சிறுமி இறப்பு குறித்து திண்டுக்கல் காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில்  தற்போது இந்த விசாரணையை CBCIDக்கு மாற்றி விசாரணை செய்ய  டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண