திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் வருடந்தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நடைபெறும். இந்த விழாவில் தோட்டக்கலைத்துறை சார்பாகவும், சுற்றுலா துறை சார்பாக மலர் கண்காட்சி  நடத்தப்படும். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்து வந்தது.


Quad Summit : மோடி பின்னால் அணிவகுத்த அதிபர்கள்... ஜப்பானில் கெத்து காட்டிய இந்திய பிரதமர்!



'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு,குளு சீசனையொட்டி கோடை விழா, மலர் கண்காட்சியுடன் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த கண்காட்சி 6 நாட்கள் நடக்கிறது. கோடை விழா அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. கோடை விழாவை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, ஆகியோர் கலந்துகொண்டு இவ்விழாவை துவக்கி வைக்கின்றனர். இதையொட்டி பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர், வெள்ளைப்பூண்டு ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


Nithyananda Samadhi: ‛சமாதியில் இருந்து வரங்களை வழங்குவேன்...’ நடுராத்திரியில் பகீர் கிளப்பிய நித்யானந்தா!




சுற்றுலா பயணிகள் குவிந்தனர் விழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மலைப்பகுதியில் பழுதடையும் வாகனங்களை அகற்றுவதற்காக மீட்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பழுதாகும் வாகனங்களை சீரமைப்பதற்காக தனி குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசாருடன் இணைந்து பணிபுரிய தனியார் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழாவையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து குவிந்தனர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோடைவிழா நடைபெறுவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.




அயன் படத்தை மிஞ்சும் கடத்தல்கள்.. இப்படியுமா யோசிப்பாங்க? விமான நிலையத்தில் சிக்கும் தங்கம்!!


மேலும் நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர் சுற்றுலா அலுவலகம் 624101 என்ற முகவரியில் நேரிலோ, 04542241675  என்ற அளவு தொலைபேசியின் மற்றும் 9092861549 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண