வைகாசி மாதத்தில் பெரும்பாலான கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். திண்டுக்கல் மாவட்டம்  வேடசந்தூர் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி கத்திகளை கட்டாமல் சேவல் சண்டை நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளர், தோல்வி அடைந்த சேவலை வீட்டுக்கு எடுத்துச்சென்று சமைத்து சாப்பிடுவார்கள். தற்போது கோவில் திருவிழாவுக்காக சண்டைக்கு தயார் செய்ய 21 நாட்கள் சேவல்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. உணவு வகைகள் பயிற்சியின்போது, சண்டை சேவல்களுக்கு தரும் உணவு வகைகளே கேட்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.


Apple device hacked : எச்சரிக்கை! ஆப்பிள் சாதனங்களுக்கு விபூதி அடித்த ஹேக்கர்ஸ்! ஷாக்கான நிறுவனம்!! தப்பிக்க இதை செய்யுங்கள்!




இதுகுறித்து சண்டை சேவல் வளர்ப்பவர்கள் கூறும்போது 21 நாள் பயிற்சியில் ஒரு சேவல் ஒன்றரை கிலோ பாதாம் பருப்பு சாப்பிட்டு விடும். தினமும் 3 முட்டை, நியூரோபியன், ரிவிட்டால் சத்து மாத்திரைகள், கேப்பை, கம்பு, உளுந்து, பாசிப்பயறு, கானம், நத்தசூரிவிதை, வெந்தயம், மிளகு இவற்றை மாவு போல் அரைத்து உணவாக தினமும் வழங்கப்படும். இதுதவிர ஒரு நாள் விட்டு, ஒரு நாள் 25 நிமிடம் நீச்சல் பயிற்சி அளிக்கப்படும். இவையில்லாமல் இறக்கை தேய்ப்பு, நெஞ்சு தேய்ப்பு போன்ற உடற்பயிற்சிகள் தினமும் நடக்கும். பயிற்சி முடிந்ததும் தினமும் ஆட்டு சுவரொட்டி அல்லது மாட்டு சுவரொட்டி சேவலுக்கு வழங்கப்படும்.


Pattina Pravesam: ''சிஷ்யனாகப் பங்கேற்றேன்.. ஆன்மீக மறுமலர்ச்சி''..அண்ணாமலையின் பட்டிணப் பிரவேச விசிட் ட்வீட்!




அதேபோல் ஆட்டு எலும்பு மூட்டு வாங்கி இடித்து, மாவுடன் கலந்து சேவலுக்கு ஊட்டுவார்கள். இவ்வாறு பல்வேறு சத்தான உணவு வகைகள் அளிக்கப்படுகிறது. மூலிகை இலை குளியல் போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு வேப்ப இலை, நொச்சி இலை, தும்பை இலை, யூகலிப்டஸ், துளசி போன்ற மூலிகை இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைக்கப்படும். பின்னர் ஆற வைத்த அந்த நீரில் மஞ்சள் பொடி கலந்து சேவலை குளிக்க வைப்பார்கள். அதன் பின் ஷாம்பு போட்டு சேவலை குளிக்க வைத்து உலர வைப்பார்கள். இதன் பிறகு களம் இறங்கும் சேவல் எதிர்த்து நிற்கும் சேவலை பதம் பார்க்கும். இவ்வாறு சேவல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


பல்லக்கு சுமந்த அண்ணாமலை, ஹெச்.ராஜா..! நடந்து முடிந்தது தருமபுர ஆதீன பட்டிணப் பிரவேசம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண