நிலக்கோட்டையில் புகழ் பெற்ற டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் குழந்தைகளுக்காக வாங்கிய கடலை மிட்டாயில் உடைக்க, உடைக்க நெளிந்து ஓடிய புழுக்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.


AIADMK DMDK Alliance: பக்கா ஸ்கெட்ச் போட்ட ஈபிஎஸ்; இறுதியில் உறுதியான தேமுதிக- அதிமுக கூட்டணி! 5 தொகுதிகள் என்னென்ன?




காலாவதியான தின்பண்டம்:


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பஸ் நிலையம் எதிரே உள்ள பிரசித்தி பெற்ற டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மன்னவராதி கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியான சந்தனபிரபு தனது குழந்தைகளுக்காக இரண்டு தினங்களுக்கு முன்பு பேக்கிங் செய்யப்பட்ட கடலை மிட்டாய் பாக்கெட் இரண்டை வாங்கி உள்ளார். வீட்டிற்கு சென்று குழந்தைகளிடம் கொடுப்பதற்காக கடலைமிட்டாய் பாக்கெட்டை உடைத்தபோது அதற்குள் இருந்து புழுக்கள் நெளிந்து ஓடியுள்ளன. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே அதே டிபார்ட்மெண்ட்ஸ்டோருக்கு சென்று முறையிட்டுள்ளார். அதற்கு அஜாக்கிதையாக பதில் சொன்ன கடைக்காரர்கள் அதற்கு பதிலாக வேறு இரண்டு கடலை மிட்டாய்களை கொடுத்துள்ளனர்.


DMK vs AIADMK: தி.மு.க. vs அ.தி.மு.க.! மக்களவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் நேரடி மோதல் தெரியுமா?




நெளிந்து ஓடிய புழுக்கள்:


ஆனால் அதிலும் பல புழுக்கள் நெளிந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் கடைக்காரர்களிடம் முறையிட்டபோது, பணியாளர்கள் அப்படித்தான் இருக்கும் என அவர்களை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்தனபிரபு நிலக்கோட்டை உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்தார். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையில் உள்ள அனைத்து கடலைமிட்டாய்களையும் பறிமுதல் செய்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்,


Panguni Uthiram: "சிவன் முதல் முருகன் வரை" - பங்குனி உத்திரம் நன்னாளில் நடந்த தெய்வ திருமணங்கள்!




உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார்:


எனவே குழந்தைகள் சாப்பிடும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கடலை மிட்டாயே இந்த நிலையென்றால், சாலையோர கடைகளில் உணவு பொருட்களின் தரம் எப்படி இருக்கும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே நிலக்கோட்டையில் உள்ள அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவுப் பொருள்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.