திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, எஸ்.பாறைப்பட்டி,  கெப்புசோலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில்  மாலை பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மாய கண்ணன் கெப்புசோலைப்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி சேகர் உள்ளிட்ட விவசாயிகளின் வாழை மரங்கள் வாழைத்தார்களுடன் சாய்ந்து சேதமடைந்தன.கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு செவ்வாழை நடவு செய்து, தற்போது தார் போட்டு  அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், பலத்த சூறாவளி காற்றுக்கு மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது.  இதனால்,  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


நாட்டின் 15 வது ஜனாதிபதி: 3 ஆண்டுகள் நிறைவு! திரவுபதி முர்முக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்து




குறிப்பாக, விவசாய மாயகண்ணனுக்கு சொந்தமான, 3 ஆயிரம் வாழை மரங்களில் 600 மரங்கள் வாழைத்தார்களுடன் சாய்ந்து விட்டது. இதனால் இவருக்கு சுமார்  மூன்று லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் விவசாயிகள் அழகர்சாமி, சேகர் உள்ளிட்ட விவசாயிகளில் 200-க்கு மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து பாதிப்படைந்துள்ளது.


கடுங்குளிர்! உலகின் உயரமான ராணுவ முகாம்! சியாச்சின் முகாமில் முதல் பெண் அதிகாரி!


Breaking News LIVE: நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் தீர்மானம்


இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆத்தூர் வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள்,  கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து, பலத்த  சூறாவளி காற்றுக்கு சேதமடைந்த வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.