Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சிவா என்ற வழக்கறிஞர் கைது

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 25 Jul 2024 09:10 PM
சிவா என்ற வழக்கறிஞரை கைது செய்தது தனிப்படை போலீஸ்!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திருவள்ளூரைச் சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை கைது செய்தது தனிப்படை போலீஸ்!

Breaking News LIVE July 25: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!

Breaking News LIVE July 25: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் வழக்கறிஞர் சிவா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் அணி

பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் அணி  

CM Stalin Tribute to Malaiappan Driver : பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.


திருப்பூரில் பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்டதும் வாகனத்தை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தி மாணவர்களை காப்பாற்றிய பிறகு இவரது உயிர் பிரிந்தது.

Raayan Update : ஜி.வி பிரகாஷுக்கு X தளத்தில் நன்றி தெரிவித்தார் நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷின் ராயன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷுக்கு X தளத்தில் நன்றி தெரிவித்தார் நடிகர் தனுஷ்!

மேயர்களை தேர்வு செய்ய உத்தரவு

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதியும், நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதியும் நடைபெற உள்ளதாக அறிவிப்பு! திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவிகள் காலியாக உள்ள நிலையில், அதற்கான மறைமுக தேர்தல் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது!

மின்சாரத்தை 100% தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்" -மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தல்

"கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3, 4 அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை 100% தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்" -மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தல்

Paris Olympics Archery : வில்வித்தை ஆண்கள் பிரிவுக்கான தரவரிசை சுற்று போட்டிகள் தொடங்கியது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : வில்வித்தை ஆண்கள் பிரிவுக்கான தரவரிசை சுற்று போட்டிகள் தொடங்கியது. இந்திய வீரர்கள் தீரஜ் பொம்மதேவரா, தருன்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் களம் காண்கின்றனர்.

Breaking News LIVE July 25: நெல்லை கோவை மாநகராட்சிகளுக்கான மேயர்களை தேர்வு செய்ய உத்தரவு 

Breaking News LIVE July 25: நெல்லை கோவை மாநகராட்சிகளுக்கான மேயர்களை தேர்வு செய்ய, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தல்! மத்திய அமைச்சரை சந்தித்த பின் துரைமுருகன் பேட்டி

காவிரியில் தடையின்றி நீர் திறக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாக துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.


காவிரி நீர் பங்கீடு, மேகதாது விவகாரம் தொடர்பாக டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சர் சி. ஆர். பாட்டீலை சந்தித்து ஆலோசனை நடத்தினார் அமைச்சர் துரைமுருகன்

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து நான்காவதாக பெரம்பூரில் அமைகிறது புதிய ரயில் முனையம்!

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து நான்காவதாக பெரம்பூரில் அமைகிறது புதிய ரயில் முனையம்!

₹360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த ₹360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

Cauvery Water : காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, வினாடிக்கு 28,000 கன அடியிலிருந்து 38,000 கன அடியாக அதிகரித்துள்ளது.  கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது‌.

Breaking News LIVE July 25: ஆம்ஸ்ட்ராங் படுகொலை : மேலும் ஒரு வழக்கில் அஞ்சலை கைது

Breaking News LIVE July 25:  ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் ஏற்கெனவே  கைதாகியுள்ள பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை, கந்துவட்டி வழக்கில் அஞ்சலை கைது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்

“சுதந்திர தினத்திற்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும்” -தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு!

“சுதந்திர தினத்திற்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும்” -தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு!

NEET SCAM FRAUD : வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும்" - நீதிபதி அதிருப்தி

நீட் தேர்வில் நடைபெற்ற ஆள் மாறாட்ட வழக்கு - தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி "ஒரு அமைப்பு கேட்கும் அனைத்து விவரங்களையும் வழங்கினால்தானே வழக்கை முழுமையாக விசாரிக்க இயலும். வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும்" - நீதிபதி அதிருப்தி

Breaking News LIVE July 25: மோசமடையும் கெஜ்ரிவால் உடல்நிலை; இந்தியா கூட்டணி ஜூலை 30ல் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உடல்நிலை மோசமாகி வருவதாகவும், மத்திய அரசு, அவரது உயிரில் விளையாடிக் கொண்டிருக்கிறது என்றும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இந்நிலையில்,  இந்தியா கூட்டணி ஜூலை 30ல் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Aam Aadmi Party : உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்திற்கு மாற்று இடம் ஒதுக்கீடு.

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்திற்கு மாற்று இடம் ஒதுக்கீடு. தேசிய கட்சிக்கான அங்கீகாரப்படி புதிய இடம் ஒதுக்க கூடிய வழக்கில் பண்டிட் ரவிசங்கர் சுக்லா லேனில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது!

குற்ற வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும்

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்று அனைத்து குற்ற வழக்குகள் தொடர்வு இயக்குநர்களிடம், தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா வலியுறுத்தல்!


நீதிமன்றங்களில் ரிமாண்ட் தள்ளுபடி செய்ய மனுக்கள் தாக்கல் செய்யும்போது வழக்கின் ஆவணங்களைக் கவனமாகப் பரிசீலித்து, நீதிமன்றத்திற்கு அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்; அரசு வழக்குரைஞர்கள் தேவைப்படும் அனைத்து நேரங்களிலும் காவல் துறையினர் எளிதில் சந்திக்கக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்!

‘Kalki 2898 AD’ படம், உலகளவில் ₹1,100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிற ‘Kalki 2898 AD’ படம், உலகளவில் ₹1,100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Breaking News LIVE: பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!



Breaking News LIVE: நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் தீர்மானம்

நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை மருத்துவக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல் தாக்கல் செய்தார்.





சேலம் மாநகராட்சியின் 25 வது ஆணையாளராக ரஞ்ஜீத் சிங் இன்று பொறுப்பேற்பு

சேலம் மாநகராட்சியின் 25 வது ஆணையாளராக ரஞ்ஜீத் சிங் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


சேலம் மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த ஆணையாளர் பாலச்சந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சியின் 25ஆவது  ஆணையாளராக ரஞ்ஜீத் சிங் இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். 

செந்தில் பாலாஜி மீதான வழக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணை

செந்தில் பாலாஜி மீதான வழக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Breaking News LIVE:புஷ்பா-2 படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப் போவதாக தகவல்



Breaking News LIVE: சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: 3-வது நாளாக தங்கம், வெள்ளி விலை சரிவு!


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.420 குறைந்து ரூ. 51,440 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430 விற்பனை ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.55,080 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,885 ஆகவும் விற்பனையாகிறது.


வெள்ளி விலை நிலவரம்:


அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ரூ.89 க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.89,000 ஆக விற்பனையாகிறது. 




 

Breaking News LIVE: விரைவில் பெரம்பூரில் புதிய ரயில் முனையம்

சென்னை சென்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ளது போல் பெரம்பூரிலும் புதிய ரயில் முனையம் அமைய இருக்கிறது. வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்க போதிய நிலலம் கிடைக்காததால் பெரம்பூர் தேர்வு செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங். தெரிவித்தார்.
மேலும், இதற்கான ஆயுவு பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் ஒரு மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்பிக்கப்படும் என்று தெரிவித்தார். நிதி ஒதுக்கப்பட்டால் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பணி நிறைவடையும் என்று தெரிவித்தார். 


 

தமிழ் புதல்வன் திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூபாய் 401 கோடி நிதி

தமிழ் புதல்வன் திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூபாய் 401 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

கர்நாடகா, கேரளத்தில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கர்நாடகா மற்றும் கேரளத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 செ.மீட்டர் மழை பதிவு

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

லால்குடி அருகே 30 சவரன் நகை கொள்ளை

லால்குடி அருகே அகிலாண்டபுரத்தில் இளஞ்செழியன் என்பவர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை - 3 பேர் கைது

சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெட்ரோ பணிகள் காரணமாக மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ பணிகள் காரணமாக மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

Background


  • மத்திய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு பாரபட்சம் என குற்றம்சாட்டி நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

  • பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் தனித்தனியே கூற முடியாது – நிர்மலா சீதாராமன்

  • ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூபாய் 6 ஆயிரத்து 362 கோடி நிதி ஒதுக்கீடு – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

  • சென்னையில் உள்ள பெரம்பூரில் 4வது ரயில் முனையம் அமைக்கப்படும்

  • நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்காளத்தின் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை தீவிரம் – தமிழ்நாடு போலீஸ் துரித நடவடிக்கை

  • இந்தியாவில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்டது சனி சந்திர கிரகணம் – மக்கள் பார்த்து மகிழ்ச்சி

  • தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ – தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராட்டம்

  • நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ராயன் படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி

  • உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழான ஒலிம்பிக் நாளை தொடங்குகிறது

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.