பழனி பேருந்து நிலையம் அருகே மின்கம்பத்தில் தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது அந்த நபர் கழிவறையில் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
TVK Vijay: திமுகவை விஜய் ஒழித்தால் அது மிகப்பெரிய தொண்டு - பழ.கருப்பையா ஆவேசம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் இளைஞர் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து உடனடியாக மின்சாரத்தை நிறுத்தினர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த நபரை பேச்சுவார்த்தை செய்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி அழைத்து வந்து பழனி நகர் காவல் நிலையத்திற்கு விசாரணை செய்தில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாவூத்தன்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி வயது (30) அழைத்துச் சென்றனர்.
Thalapathy Vijay: அரசியலில் வெற்றி பெறுவாரா விஜய்? பிரசன்ன கட்டம் சொல்வது என்ன?
அப்போது கழிவறைக்கு செல்வதாக உள்ளே சென்ற அந்த நபர் திடீரென அங்கிருந்த ஜன்னல் கண்ணாடி எடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டு இரத்த வெள்ளத்தில் கீழே கடந்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
உடல்நிலை மேலும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பழனி நகர் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை தீர்வாகாது:
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050