கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பேருந்துகள் மற்றும் கனரக 6 சக்கர வானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்களான தூண் பாறை, பைன் மரகாடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்ல நாளை முதல் வாகனங்கள் பாம்பார்புரம் சாலை வழியாக செல்ல காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.




வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் விடுமுறை தினங்களில் கொடைக்கானலில் குவியும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளால், நகர் பகுதிகளில் சுமார் 3 கிமீ தூரம் வரை சாலையின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து  சுற்றுலா வாகனங்கள் செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நடந்து வருகிறது.


சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!




மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.


சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்... யூடியூபர் மகன் கைது... சிக்கிய ரவுடி பேபி சூர்யா...




இங்கு வரும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. கொடைக்கானல் வத்தலகுண்டு சாலை முதல் அப்சர்வேட்டரி சாலை ஏரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் தற்போது பெரும் இடையூறாகவே இந்த போக்குவரத்து நெரிசல் உள்ளது .




Aadhav Arjuna : “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!


தொடர்ந்து தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பேருந்துகள் மற்றும் கனரக 6 சக்கர வானங்கள் செல்ல தடை விதித்தும் மேலும் சுற்றுலா தலங்களான தூண் பாறை , பைன் மரகாடுகள் , குணா குகை ,மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்ல நாளை முதல் வாகனங்கள் பாம்பார்புரம் சாலை வழியாக செல்ல காவல் துறை சார்பில் வானங்களில் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது . இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் போக்குவரத்து விதி முறைகளை சுற்றுலாப் பயணிகளும் பொது மக்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .தொடந்து விடுமுறை நாட்கள் வர இருப்பதால் கூட்ட நெரசலில் வாகனங்கள் சிக்காமல் இருக்க கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது .