சின்னமனூர் அதிமுக நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நகரச் செயலாளரின் ஆதரவாளர்களே வைத்து நகர செயலாளர் தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.



தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகரச் செயலாளராக உள்ளவர் பிச்சைக்கனி பிச்சைக்கனியின் அலுவலகம் மற்றும் வீடு சின்னமனூர் கம்பம் தேசிய சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் வந்து பிச்சைக்கனியின் வளாகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அவர் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . இந்த புகாரின் பேரில் சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பிச்சைக்கனி இந்த வெடிகுண்டு வீச்சு சம்பம்  தொடர்பாக அவர் அளித்திருந்த புகாரில் சின்னமனூர் பகுதியைச் சார்ந்த அதிமுக பிரமுகர் வெங்கடேஷ் என்பவருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் குறிப்பிட்டு அவர் மீது புகார் அளித்திருந்தார்.


Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்




இதை தொடர்ந்து காவல்துறையினர் இந்த புகாரின் அடிப்படையில் சின்மைனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியல் உள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் பிச்சைக்கனியின் உதவியாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணையில் பிடிபட்டவர்கள் பிச்சைக்கனியின் உதவியாளர்கள் செல்வராஜ் முகேஷ் மாரியப்பன் முத்துவேல் ஆகிய நான்கு பேர் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவர் நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சின்னமனூர் நகர செயலாளர் பிச்சக்கனி உட்பட மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்க கூடும் என்ற கோணத்தில் சின்னமனூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!


முதற்கட்ட விசாரணையில் சின்னமனூர் பகுதியைச் சார்ந்த அதிமுக கவுன்சிலர் உமாராணி என்பவரது மகன் வெங்கடேசன் என்பவருக்கும் பிச்சைக்கனி என்பவருக்கும் இடையே பல்வேறு முன்விரோதம் காரணமாக பிரச்சனைகள் நடைபெற்று வந்ததாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக கம்பம் அதிமுக பொதுக்கூட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சின்னமனூர் நகரில் உள்ள வெங்கடேசன் என்பவர் இல்லத்தில் அவரின் காரை சேதப்படுத்திய தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு பிரச்சனை சம்பவங்கள் நிலுவையில் உள்ள சூழ்நிலையில் இது போன்ற பெட்ரோல் குண்டு வீச்சு  நடைபெற்றால் வெங்கடேசன் மீது பலி விழும் என்பதற்காக கூட  இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும் தனது உதவியாளர்களை  வைத்தே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் சின்னமனூர் பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மேலும் சின்னமனூர் நகர செயலாளர் பிச்சைக்கனி மற்றும் பல தலைமறைவாக உள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.