புதுச்சேரி : சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய, யூடியூபர் மகனை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


யுடியூபர் மகன் கைது


புதுச்சேரியை சேர்ந்த பிளஸ் 1 பயிலும் சிறுமி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார். சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு அறிமுகம் இல்லாத புதிய நபரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. நாளைடைவில் இருவரும் குறுஞ்செய்தி அனுப்புவது, வீடியோக்களை பரிமாறுவது மூலம் நட்பாக பழகி உள்ளனர். அவர்கள் பழகிய 15 நாட்களுக்குள் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.


பின்பு, ஆபாச வீடியோக்கள் மற்றும் அவரது அந்தரங்க வீடியோக்களை அனுப்பி உள்ளார். சிறுமியையும் நிர்வாணமாக வீடியோவில் தோன்றுமாறு மிரட்டி உள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த அந்த சிறுமி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தாய் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நவீன மென்பொருட்களை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் மூலமாக அந்த வீடியோவை அனுப்பியது யார் என்று விசாரணை நடத்தி வந்தனர்.


ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டல்


போலீசார் விசாரணையில் சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டியது மதுரை சேர்ந்த பிரபல யூடியூபர் சிக்கந்தின் ஷா - சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி (24) என்பதும், ரவுடி பேபி என்று அழைக்கப்படும் திருச்சி சூர்யா அவருடைய சித்தி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அஷ்ரப் அலியை கைது செய்ய சைபர் கிரைம் சீனியர் எஸ்பி கலைவாணன் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் தியாகராஜன், கீர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார், மதுரையில் பதுங்கியிருந்த அஷ்ரப் அலியை கைது செய்து புதுச்சேரி கொண்டு வந்தனர்.


 சிக்கிய ரவுடி பேபி திருச்சி சூர்யா...


அவரது செல்போனை போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பல்வேறு பெண்களுக்கு இதுபோன்று அஷ்ரப் அலி ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அஷ்ரப் அலியை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சைபர் கிரைம் போலீசார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தின் ஷா, சுமி ஆகியோரையும் விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்தனர்.




சைபர்கிரைம் விழிப்புணர்வு 



  1. அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது Credit Card/Debit Card Details/OTP/CVV/Expiry Date எண்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டாம்.

  2. Online மூலம் Part Time Job என வரும் போலி Link விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.

  3. Fake Loan App இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டாம். உங்கள் கைபேசி Hack செய்யப்பட்டு விடும் ஜாக்கிரதை,

  4. Naptol, Meesho பரிசு விழுந்துள்ளதாக வரும் தபால் கூப்பன்களை பார்த்து ஏமாறாதீர்கள்.

  5. OLX போன்ற இணையதளத்தை பயன்படுத்தி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் விற்பதற்காக வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.

  6. Telegram, Facebook, Instagram போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனங்களை வாங்க வேண்டாம்.

  7. Army Vehicles Purchase 6163 அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம் இது முற்றிலும் Fake ஆனது.

  8. Unknown Link, Message, Call, Video Call, Sexy Video Call எவ்வித பதிலும் அளிக்காமல் விட்டுவிடுங்கள்.

  9. Any Desk Quick Support CL Remote Access Appகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

  10. Fake Investment App பிரபல முதலீட்டு நிறுவனத்தின் பெயரை கூறி பொய்யான முதலீடு செய்ய தொலைபேசி மூலம் அழைத்து பணம் செலுத்தக்கூறினால் முதலீடு செய்து ஏமாறாதீர்கள்.

  11. அறிமுகம் இல்லாத நபர் Whatsapp or Telegram மூலம் அனுப்பும் QR Code Scan செய்யாதீர். இது முற்றிலும் மோசடியானது.

  12. இலவச WiFi வசதிகளை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளை தவிர்த்துவிடுங்கள்.

  13. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி KYC Biometric System Update என கூறுவதை நம்பி ஏமாறவேண்டாம்.

  14. Helicopter Ticket Booking Q வேண்டாம்.

  15. Postal Payment Bank KYC Update வேண்டாம்.

  16. Credit Card Bonus Point Redeem செய்துதருவதாக கூறி போன் வந்தால் அதை நம்பி ஏமாற வேண்டாம்.

  17. True Caller App Gpay, Phone pe பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இது உங்கள் போனை Hack செய்துவிடும்.

  18. தேவையற்ற App-களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். UnUsed App களை உடனடியாக செய்து விடுங்கள்.

  19. உங்களது மொபைலில் Date of Birth, Cell Phone Number போன்ற Easily Access பண்ண கூடிய Password-ஆக வைக்க வேண்டாம்.

  20. உங்களது Cellphone ல் Profile DP-இல் உங்கள் Photo வைக்க வேண்டாம். உங்கள் Photo morphing செய்து பணம் பறிக்கக்கூடும்.

  21. Instagram IMO போன்ற சமூக வளைதளங்களை பயன்படுத்தி அறிமுகம் இல்லாத நபர்களிடம் தகவல்களை பறிமாற்றம் செய்ய கூடாது. Facebook, Whatsapp போன்ற சமூகவளைதளங்கள் மூலம் உங்களிடம் தெரிந்த நபர்களின் அக்கவுண்ட் எண்ணில் பண உதவி கேட்டு வரும் செய்திகளை கேட்டு நம்பி பண உதவி செய்து ஏமாற வேண்டாம்.