தமிழகத்தின் பாரம்பரியமான  தென் மாவட்டத்தின் உயிர் மூச்சு என்று சொல்லப்படும் தாய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவிற்கு தாய் மாமனுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது வழக்கம். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் தனது அக்கா குழந்தைகள், தங்கச்சி குழந்தைகளுக்கு எந்த விசேஷங்கள் என்றாலும் தாய்மாமன் தன்னால் முடிந்த அளவு அனைவரையும் வியக்க வைக்க வகையிலும் நான் இருக்கிறேன் பயப்பட வேண்டாம் எனக் கூறி விழாக்களில் செய்முறைகளோடு வந்து நிற்பது வழக்கம் அதேபோல் தாய்மாமனுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படும்.


Ex. Minister K.Pandiarajan: என்னது? பாஜகவில் இணைகிறேனா? - முற்றுப்புள்ளி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா!




திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கீழ் மழை பகுதியான கே சி பட்டியில் விவசாயி. தொழிலதிபர் AC ஐயப்பன் தனது மகள் தீபா அக்ஷயாவுக்கு பூப்புனித நீராட்டு விழா வீட்டில் அருகிலேயே மிகப்பிரமாண்டமான பந்தல் அமைத்திருந்தார் . விழாவின் முக்கிய பங்கு வகிக்கும்  தாய்மாமன் சம்பத்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் பகுதியில் இருந்து தனது தங்கை மகளை குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துக் கொண்டு வாழை, மாதுளை,


ALSO READ | Maha Shivaratri 2024: ஓம் நமசிவாய! மகா சிவராத்திரி எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? முழு தகவல்




திராட்சை உள்ளிட்டவைகளும் அனைத்து வகை மிட்டாய்கள் அரிசி பருப்பு மற்றும் இனிப்பு வகைகள் என சுமார் 233 வகைகளில் எங்கள் தலைகளில் சுமந்தும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ளவை லாரியில் அடிக்கும் மேளதாளம் முழங்க கேரளா செண்டை மேளம், கேரள பாரம்பரிய நடனம் என மலை கிராமத்தையே வியக்க வைக்கும் வகையில் சீர்வரிசை கொண்டு வந்து  தனது மருமகளையும் அழைத்துக் கொண்டு விழா நடக்கும் பந்தலை நோக்கி அழைத்து வந்தார்.


TN Railway Stations: அப்கிரேட் ஆகிறது 34 தமிழக ரயில் நிலையங்கள் - அடிக்கல் நாட்டுகிறார் மோடி: உங்க ஊர் இருக்கா?




மேலும், இந்த விழாவில் மலை கிராம மக்களால் ஆதிவாசி மக்கள் தங்களது பகுதியில் சேகரிக்கப்பட்ட வாழை, தேன், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை தங்களது சீராக கொண்டு வந்தது, மலை கிராம மக்கள் இன்னும் யாரும் மாறவில்லை அனைவரும் ஒற்றுமையாக உள்ளார்கள் என்றும் மலையையே வியக்க வைத்த விழாவாகவும் அமைந்து இருந்தது.