பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா பழக்கம் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக சிந்தட்டிக் ட்ரக்ஸ் அதிகமாகிவிட்டது. டெல்லியில் ரூ.2000 கோடி போதை பொருள் கடத்தல் ஏற்பட்ட போது அதன் தலைவராக இருந்தவர்களில் ஒருவர் திமுக அமைப்பாளர் ஜாபர் சாதிக். முக்கிய குற்றவாளியாக உள்ள அவரது சகோதரர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியாக உள்ளார். இவரும் அந்த வழக்கில் ஒரு குற்றவாளி. இதில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் தயாரிப்பாளராக இருந்திருக்கிறார், தமிழக டிஜிபி கேடயம் வழங்கி கௌரவித்துள்ளார். இந்த இடம் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது போல் தெரிகிறது. இன்னைக்கு அவசர அவசரமாக அவரை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு புறம் போதை பொருள் அதிகரித்திருப்பது மற்றொருபுறம் 2000 கோடி கஞ்சா மாட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், அதன் பின்னர் இது தொடர்பாக முதல்வர் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.




 

 அ.தி.மு.கவில் பா.ஜ.கவினர் சேர்கிறார்கள் என இ.பி.எஸ்., கூறியுள்ளது குறித்த கேள்விக்கு

 

தொண்டர்களை கஷ்டப்பட்டு இழுக்கிறார்கள். நாங்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் அமைச்சர்களை இழுக்கிறோம்.

 

அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகிவிட்டது என்று செல்லூர் ராஜூகூறியதற்கு குறித்த கேள்விக்கு

 

அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான் என செல்லூர் ராஜூடம் சொல்லுங்கள் அதை குறைப்பதற்கு ஏதாவது முயற்சி எடுக்க சொல்லுங்கள். 

 

மோடியா, எடப்பாடியா என பிரச்சாரம் மேற்கொள்வோம் என அதிமுகவினர் கூறியது குறித்த கேள்விக்கு:

 

நான் சிரித்து விட்டேன் என்று சொல்லுங்கள்.

 

பாஜக ஒரு கையில் நோட்டு பெட்டி; ஒரு கையில் ஓட்டுப்பெட்டி உள்ளது சீமான் கூறியது குறித்த கேள்விக்கு:

 

நோட்டுப்பட்டி, ஒட்டி பெட்டி என இரண்டுக்கும் சுற்றுவதைப்போல் தெரிகிறது. 

 

மத்திய அமைச்சர் நிதிக்குறிப்பு கேட்டதற்கு ஆணவத்துடன் பேசியது குறித்த கேள்விக்கு:

 

பாசையும் அதே போல சில மனிதர்களுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும் போது பாசையும் அதிகமாக தான் இருக்கும். மத்திய அமைச்சர் வார்த்தையில் எந்த தவறும் கிடையாது. தெர்மாகோல் விஞ்ஞானிகள் எல்லாம் எங்களுக்கு அட்வைஸ் செய்கிறார்கள். நாங்கள் தமிழக மக்களை பார்த்து பேசவில்லை, இதற்கு முன் இப்படி பேசியதில்லை பேச வேண்டிய கட்டாயம். மோசமான அரசியல் வாதிகளுக்கு அவர்களுடைய பாசையில் திருப்பிக் கொடுத்தால் தான் இந்த அரசியல் சாக்கடை மாறும் என்பதற்கு நானும் வந்துவிட்டேன். அவர்கள் பேசும் வார்த்தையில் தான் என்னுடைய பதிலும் இருக்கும்.

 

தமிழகத்தில் திமுகவை நோக்கி பாஜகவின் பிரச்சாரம் எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கு:

 

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. 2026 கான மாற்றம் 2024 இல் நடக்கும். தமிழகத்தில் ஒரே தேர்தல் நடக்கும். திமுக தனக்கான தன்மையை இழந்து விடும் அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் சும்மா ஆட்சியில் தான் இருப்பார்கள். 

 

டிஎம்கே பைல்ஸ் வெளியீடு குறித்த கேள்விக்கு:

 

தேர்தலுக்கு இன்னும் 45 நாட்கள் உள்ளது. அரசியல் களம் தீ பிடிக்கத் துவங்கியுள்ளது. இன்றைக்கு டிவி சேனல் இன்றைக்கு டிவி சேனல்கள் தான் நாடகமாக உள்ளது. அடிப்படையில் நாங்கள் கொள்கை அடிப்படையில் செயல்படுகிறோம் நிச்சயமாக 45 நாட்களில் சூறாவளியாக இருக்கும். பாஜக அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்த உள்ளோம். நாளை மாலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் நடைபெறும் நிகழ்வைப் பாருங்கள்.