சென்னை மாவட்டம், இளைஞர் நீதி குழுமத்தில் பணிபுரிய உதவியாளருடன்இணைந்த கணினி இயக்குபவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்
சென்னை இளைஞர் நீதி குழுமத்தில் பணிபுரிய உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பதவியினை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்ப படிவத்தை https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்ப படிவத்தில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பூர்த்தி செய்து (செய்தி இவளியீடு நாளிலிருந்து 15
நாட்கள் வரை) கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்
காலி பணியிடம் - 1
கல்வித் தகுதி
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தொழில்நுட்ப தகுதி
- தட்டச்சு / தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலைத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கணினி அறிவு (சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்)
வயது வரம்பு
40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது (பொது விண்ணப்பதாரர்களுக்கு)
தொகுப்பூதியம்
ரூ.11,916 ஒவ்வொரு மாதமும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண். 13, சாமி பிள்ளைத் தெரு,
சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை-600 112.
விண்ணப்பிப்பது எப்படி?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என்று சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://chennai.nic.in/