Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 26 Jun 2024 09:23 PM
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்




டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள்கள் சிபிஐ காவல்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள்கள் சிபிஐ காவல் விதித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.

Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் பகுதியில், சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி

Breaking News LIVE: பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பாளர்கள் களத்தில்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெறப்பட்ட 64 வேட்புமனுக்களில் 29 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: பாஜக வானத்துக்கும், பூமிக்கும் குதிக்க கூடாது - திருநாவுக்கரசர் 

தமிழ்நாட்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் தரும் மதுவை படிப்படியாக தடை செய்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால், 45 லட்சம் கோடி மருத்துவ செலவு குறையும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


பாஜகவிற்கு ஒரு சில இடங்களில் வாக்கு சதவிகிதம் அதிகரித்ததை மட்டும் வைத்துக்கு கொண்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க கூடாது, அது கூட்டணிகட்சிகளால் உயர்த்தது என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

"சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதை எமர்ஜென்சியின் போது நடந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகிறது"

எமர்ஜென்சியின் போது நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


 
Breaking News LIVE: நாமக்கல்: 6ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 6 வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

Breaking News LIVE: செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு..!

செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணையை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனு மீது மனுத்தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமநாதன் (62) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இலவசமாக வீடியோக்களை பார்க்கலாம் என அந்நிறுவனம் அறிவிப்பு!

Breaking News LIVE: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரே நாளில் 2 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 20 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 3-பேர் உயிரிழந்தனர் நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் மேலும் 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை ஏசுதாஸ்(35) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இதனைத் தொடர்ந்து தற்போது ராமநாதன் வயது 62, எவரும் சிகிச்சை பணனின்றி உயிரிழந்ததாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 9- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அனைத்துக் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் - ஜெயக்குமார்

சட்டப்பேரவையில் விவாதம் நடத்தவே திமுக பயப்படுவதாக சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை அனைத்து கட்சிகளும் எடுக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் தேர்தலை புறக்கணித்தால் தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளும். திமுகவின் தலைமை கழக பேச்சாளர் போல் சபாநாயகர் செயல்படுகிறார்” என தெரிவித்தார்.  

Breaking News LIVE: அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை

அவசர நிலைக்கு எதிராக மக்களவையில் மவுனம் செலுத்தப்பட்டது. பின்பு அவசரநிலையை எதிர்க்கும் கண்டன தீர்மானத்தை ஓம் பிர்லா வாசித்ததால் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பினர். அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது

Breaking News LIVE: மக்களின் குரலை எதிர்க்கட்சிகள் எதிரொலிக்கின்றன: ராகுல் காந்தி

 Breaking News LIVE: மக்களின் குரலை எதிர்க்கட்சிகள் எதிரொலிக்கின்றன: ராகுல் காந்தி 


அரசுக்கு அதிகாரம் உள்ளது. மக்களின் குரலை எதிர்க்கட்சிகள் எதிரொலிக்கின்றன - ராகுல் காந்தி மக்களவையில் பேச்சு

தனித் தீர்மானத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது - செல்வபெருந்தகை

"இந்தியாவில் வேலைவாய்ப்புக்கும் சமூக நீதிக்கும் முதல் முதலில் குரல் எழும்பியது தமிழ்நாட்டில் இருந்துதான். ஒன்றிய அளவில் சமூக நீதிக்கு எதிரான, உண்மைக்குப் புறம்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2011ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை எதற்காக ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை. இதுவே இவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்பதற்கு அடையாளம். முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது" - முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை

நேர்மறையான முன்னெடுப்புகளுக்கு காரணமாக இருந்தவர் ஓம் பிர்லா - பிரதமர் மோடி

மக்களவையில் பல்வேறு நேர்மறையான முன்னெடுப்புகளுக்கு காரணமாக இருந்தவர் ஓம் பிர்லா - பிரதமர் மோடி பாராட்டு

2வது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!

மக்களவையில் அதிகாரமிக்க பதவியான சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா தொடர்ந்து 2வது முறையா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஓம் பிர்லாவுக்கு கை குலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Breaking News LIVE: கொடிக்குன்னில் சுரேஷை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்..!


இந்தியா கூட்டணி சார்பில் அரவிந்த் சாந்த், சுப்ரியா சுலே, கனிமொழி ஆகியோர் கொடிக்குன்னில் சுரேஷை முன்மொழிந்தனர். அதே நேரத்தில் மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லாவை முன்மொழிந்தார் பிரதமர் நரேந்திர மோடி. 

Breaking News LIVE: ஓம் பிர்லாவை சபாநாயகராக கொண்டு வர தீர்மானத்தை முன்மொழிந்த பிரதமர் மோடி..!

ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்வு செய்யும் தீர்மானத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார். அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் தீர்மானத்தை வழிமொழிந்தனர். 

Breaking News LIVE: மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் தொடங்கியது..!

மக்களவையில் அதிகாரமிக்க பதவியான சபாநாயகர் பதவிக்கு தேர்தல் தொடங்கியுள்ளது. மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் ஓம் பிர்லா, கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 


 

இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவு

இந்தியா கூட்டணி வேட்பாளரான சுரேஷ் கொடிக்குன்னிலுக்கு திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. 

சென்னையை அடுத்த மணிமங்கலத்தில் எட்டாம் வகுப்பு மாணவர் தோனி தற்கொலை

சென்னையை அடுத்த மணிமங்கலத்தில் எட்டாம் வகுப்பு மாணவர் தோனி (12) தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டார் நன்றாக படிக்க வேண்டும் என தாய் தொடர்ந்து அறிவுரை கூறியதால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டதாக தகவல்

கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்

சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம் - நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவு கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின், தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் நடவடிக்கை.

நீலகிரியில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு

முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு! ஜூலை 21ம் தேதி நடைபெறவுள்ள திறனாய்வுத் தேர்வுக்கு, அரசுப்பள்ளிகளில் இந்த கல்வியாண்டு 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக ஜூன் 21-26 வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது!

கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கனமழை காரணமாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை. விதிப்பு மறு அறிவிப்பு வரும்வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி, NDA சார்பில் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி, NDA சார்பில் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு மக்களவையில் YSR காங்கிரஸ் கட்சிக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர்

Breaking News LIVE: கோவை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோவை சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்  அருவிக்கு செல்ல இன்று சுற்றுலா பணிகளுக்கு  வனத்துறை தடை விதித்துள்ளது. 

Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

Background


  • கனமழை காரணமாக கூடலூர், வால்பாறை, பந்தலூர் தாலுகாவில் கல்வி நிலையங்களுக்கு  இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள்  உத்தரவிட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில் வெயிலே தெரியாத அளவுக்கு கோடை மழை கொட்டித் தீர்த்தது. இதனிடையே வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும், மற்ற இரு தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது, 

  •  நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதில் பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்வது தொடர்பாக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக முதல்முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. 543 உறுப்பினர் மக்களவையில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 293 உறுப்பினர்கள் உள்ளதால்,  அவர்களது வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • டி20 உலகக்கோப்பையில் நாளை நடைபெறும் 2 அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா - இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. இதில் இந்தியா - இங்கிலாந்து மோதும் ஆட்டத்தின் போது பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.