வடமதுரை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் சரக்கு வாகனங்களில் திருடும் மர்மக்கும்பல் போலீசார் பிடிக்க முடியாமல் திணறல். நெடுஞ்சாலையில் சரக்கு வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே பூனானம்பாளையத்தை சேர்ந்த லாரி ஒட்டுநர் நிவாஸ் (31).பழனி அருகே கோல்டு வின்னர் கம்பெனியில் இருந்து சரக்குகளை எடுத்துக்கொண்டு கும்பகோணத்தில் இறக்குவதற்காக வடமதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளபொம்மன் பட்டி திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
Gold, Silver Price : ஹாப்பி நியூஸ்..! சென்னையில் இன்று சரிந்த தங்கம் விலை...!
அப்போது வெள்ளபொம்பன்பட்டி என்ற இடத்தில் வண்டி ஆடுவதாய் கணித்த லாரியின் டிரைவர் வாகனத்தை நிறுத்தி மேலே ஏறிப் பார்த்தபோது தான் ஏற்றி வந்த கோல்டு வின்னர் ஆயில் பெட்டி 90 க்கும் மேற்பட்ட பெட்டியை (900 லிட்டர்) தார்பாயை கிழித்து எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
நெடுஞ்சாலையில் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் எல்லாம் தார்பாய் முருகன் என்பவனின் அட்டகாசம் தாங்காமல் வேறு பாதையில் செல்கின்றனர். காரணம் லாரி போய் கொண்டு இருக்கும் போதே சத்தமின்றி அதன் பின்னால் ஏறி அதிலிருந்து சரக்குகளையெல்லாம் திருடிவிடும் ஆற்றல் கொண்டவன் அதேபோல் வேடசந்தூர் பகுதிகளிலும் தார்ப்பாய் முருகன் போல் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் உலா வருகிறார்கள் என்று சமூக ஆர்வலர் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஐதராபாத் நகைக்கடைகளில் அமலாக்கத்துறை சோதனை ! ₹149.10 கோடி நகை மற்றும் ₹1.96 கோடி பணம் பறிமுதல்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்