திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யன்கோட்டையை சேர்ந்தவர் ரத்தினகுமார், இவருக்கும் இதே ஊரில் வசிக்கும் இவரது உறவினர்களுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக ரத்தினகுமாரை காணவில்லை என அவரது சகோதரர் ராஜ்குமார் பட்டிவீரன்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
TN Rain Alert: இன்னும் 5 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கப் போகுது கனமழை...! குடையோடு வெளியில போங்க..!
இதனையடுத்து போலீசார் ரத்தினகுமாரை தேடியதில் அய்யங்கோட்டையைச் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் 23, மைதிலி நாதன் (18), பிரேம் குமார் (23) , லோகேஷ் குமார், சித்தையன்கோட்டையைச் சேர்ந்த இளங்கோவன் (28) மதுரையைச் சேர்ந்த அபிக்குமார், ஆகிய 6 பேரும் சேர்ந்து ரத்தினக்குமாரை தாக்கி கடத்தி சென்று கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Guest lecturer Protest: கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கமா?- உயர் கல்வித்துறை செயலர் விளக்கம்
இந்த சம்பவம் குறித்து விக்கி (எ) விக்னேஷ், மைதிலிநாதன், அபிக்குமார் ஆகிய மூன்று பேரையும் பட்டிவீரன்பட்டி காவல்துறை தனிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றவாளிகள் வீரன் பட்டி போலீசாரிடம் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். இதில் ரத்தினகுமாரை தாக்கி கடத்தி வந்து கொலை செய்து, புல்லாவெளி நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் வீசியதாக குற்றவாளிகள் கூறினர்.
Uttar Pradesh : உத்தரபிரதேசத்தில் தொடரும் கனமழை! 6 பேர் உயிரிழப்பு!
இதனையடுத்து பட்டி வீரன் பட்டி போலீசார் மற்றும் ஆத்தூர், வத்தலகுண்டு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய நான்கு தீயணைப்பு துறையினருக்கும் மற்றும் மீட்புப் குழுவினரும் மற்றும் பெரும்பாறை பகுதி பொதுமக்கள் 50 பேர் இணைந்து ரத்தினகுமாரின் உடலை தேடி வந்தனர். இந்நிலையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கும் மீனாட்சி ஊத்து என்ற இடத்திற்கும் இடையில் சுமார் 400 அடி ஆழமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் இருந்து ரத்தினகுமாரின் உடல் மீட்கப்பட்டு தாண்டிக்குடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரத்தினகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக ரத்தினகுமார் கடத்திக் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்