உத்தரபிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் 6 பேர் உயிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வானிலை மையம் அறிவித்துள்ள தகவலின்படி இன்றும் அந்த பகுதியில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  மாநிலத்தின் 18 மாவட்டங்களில் 1,300க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 6 உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்களுள் மூன்று பேர் கனமழை காரணமாகவும் ,  ஒருவர் மின்னல் தாக்கியும், ஒருவர் தண்ணீரில் அடித்துவரப்பட்ட பாம்பு கடித்தும் மற்றொருவர் வெள்ளத்தில் மூழ்கி இறந்ததாகவும் கூறப்படுகிறது. 







உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு நிதி (SDRF) மற்றும் காவல்துறையின் குழுக்களை அனுப்பவும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார். உத்தர பிரதேசத்தில் உள்ள பல ஆறுகள் அபாய கட்டங்களை தாண்டிவிட்டன.படான் பகுதியில் கங்கை நதி அபாய கட்டத்தை எட்டியுள்ளது.இதற்கிடையில், தொடர் மழையால் பயிர்கள் நாசமாவதோடு, விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி கிடப்பதால், அப்பகுதி விவசாயிகள் நிர்வாகத்திற்கு எதிராக புகார் கூறுகின்றனர்.







வடதமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதே போல நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.