திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப்பட்டி களத்து வீட்டை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (31). விவசாயி. அவருடைய மனைவி கீர்த்திகா (23). இவர்கள் 2 பேரும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனா். அப்போது அருகில் வசித்த 4 வயது சிறுமியுடன் இவர்கள் பழகினர். இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி கணவன், மனைவி 2 பேரும் செங்குளத்துப்பட்டியில் உள்ள தங்களது வீட்டுக்கு அந்த சிறுமியை அழைத்து வந்தனர்.
தெர்மாகோல் சாதனையை முறியடித்த சின்னவருக்கு வாழ்த்துக்கள்.. பாஜக தரப்பு ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு
அங்கு ராஜேஷ்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. மேலும் ராஜேஷ்குமாரின் மனைவி கீர்த்திகா சிறுமியின் உடலில் சூடு வைத்து கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி உயிரிழந்தார்.
இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேஷ்குமார், கீர்த்திகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொடூர தம்பதியின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதே போல் வேடசந்தூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் நவீன்குமார் (33). சுமைதூக்கும் தொழிலாளி. அவருடைய மனைவி விஜயசாந்தி. கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி நவீன்குமார், கோடாங்கிபட்டி அருகே உள்ள கவுண்டர்குளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், விஜயசாந்திக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்ற சிவாவுக்கும் (33) கள்ளக்காதல் இருந்து வந்தது. தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக நவீன்குமாரை கழுத்தை அறுத்து பழனிசாமி கொலை செய்துள்ளார்.
Cervical Cancer Vaccine : கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி.. விரைவில் இந்தியாவில்? விவரம் என்ன?
இதற்கு நவீன்குமாரின் மனைவி விஜயசாந்தியும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விஜயசாந்தி, அவரது கள்ளக்காதலன் சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஆட்சித்தலைவருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்