திண்டுக்கல்லில், பழனி பைபாஸ் சாலையில் வெங்காய தரகுமண்டி (வெங்காய மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த வெங்காயத்தை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.  வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் இந்த வெங்காய மார்க்கெட் செயல்படும். உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் சராசரியாக 12 டன் வெங்காயம் விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இவை கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர், ,உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


Ola, Uber: 14% வரை விலை ஏறுகிறது ஓலா.. ஊபர் வாடகை..!? விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய கட்டணம்..




இந்தநிலையில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெங்காய மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக வெங்காயம் அதிக அளவில் வரத்தாகிறது.  வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் வியாபாரிகளும் கூடுதல் விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படவில்லை. அதேநேரம் மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து அதிகரித்ததால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.60 வரை விற்பனை ஆன ஒரு கிலோ வெங்காயம், அவற்றின் தரத்தை பொறுத்து ரூ.10 முதல் ரூ.20 வரையே தற்போது விற்பனை ஆகிறது. வெங்காய விலை வீழ்ச்சியால், அதனை சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடைக்கு செலவிடும் தொகை கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் அறுவடை செய்யாமல் வயல்களிலேயே அப்படியே விட்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது. 


Kodanad Estate Case: கோடநாட்டில் நடந்தது என்ன? சசிகலாவிடம் இன்று விசாரணை




வெங்காயத்தை உரித்தால் தான் நமக்கெல்லாம் கண்களில் கண்ணீர் வரும். ஆனால் அதன் விலையை கேட்டாலே விவசாயிகள் கண்ணீர் விடும் சூழல் தற்போது நிலவுகிறது. இதேபோல் விலை வீழ்ச்சியால் வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.  இதுகுறித்து திண்டுக்கல் வெங்காய தரகு மண்டியில் உள்ள விற்பனையாளர்கள் கூறுகையில் ஜனவரி, பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைத்தது. உள்ளூரில் வெங்காய விளைச்சல் அதிகமானதால் தற்போது மார்க்கெட்டில் வெங்காய வரத்து அதிகரித்தது. ஆனால் வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி முழுமையாக தடைபட்டது. இதன் காரணமாகவே அவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது என்றார்.


TN Assembly Session LIVE: மானியக் கோரிக்கை மீதான கேள்வி - பதில்.. சட்டப்பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன்..



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண