திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த கடைக்கு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.




திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி செல்வதற்காக சுப்ரமணி என்ற ஓட்டுநர் பேருந்தை இயக்க முயன்று வெளியே வந்த போது, பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த ஸ்வீட் கடையில் அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது. இதனால் கடைக்குள் இருந்த பெண் காயம் அடைந்து அருகில் இருந்தவரின் உதவியோடு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.




மேலும் கடையில் இருந்த கண்ணாடி பொருட்கள் மற்றும் ஸ்வீட்டுகள் அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில் அரசு பேருந்தை பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு எடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கடந்த வாரம் பழனியில் அரசு பேருந்து ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தபோது  சக்கரம் கழண்டு ஓடியது. இதனால் பயணிகளின் உயிர் நூழிலையில் தப்பியது. அதேபோன்று தற்போது அரசு பேருந்து பழுதடைந்து பிரேக் பிடிக்காமல் கடைக்குள் புகுந்து இருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.


Breaking News LIVE: ஜம்மு காஷ்மீர் : கண்டி வனப்பகுதியில் பரவிய தீ.. பரபர வீடியோ காட்சிகள்


இந்த நிலையில் கவனக்குறைவாக பஸ் ஓட்டிய டிரைவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலாளர் தெரிவிக்கையில், பெரியகுளம் கிளையிலிருந்து கரூருக்கு அரசு பேருந்தை டிரைவர் பழனிசாமி நேற்று முன்தினம் காலை 6.05 மணிக்கு ஓட்டி சென்று உள்ளார். அங்கிருந்து திண்டுக்கல் வரை சுமார் 210 கி.மீ எந்தவித இயந்திர கோளாறும் ஏற்பட வில்லை.




மீண்டும் திண்டுக்கல்  பேருந்து நிலையத்திலிருந்து தேனிக்கு மதியம் 1:45 மணிக்கு  புறப்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் போது, ஓட்டுநர் விதிமுறைகளை பின்பற்றாமல் வேகமாக இயக்கி, இடது புறம் திரும்புவதற்கு பதிலாக நேராக பேருந்தை இயக்கி ஸ்வீட் கடைக்குள் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.


IND Vs USA, T20 Worldcup: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்திய அணி? ஷாக் கொடுக்குமா அமெரிக்கா? - இன்று பலப்பரீட்சை


எனவே, பேருந்து விபத்துக்கு டிரைவரின் கவனக்குறைவால் நடந்துள்ளது. மேலும் இதே பேருந்து இதற்கு முந்தைய நாட்களில் பராமரிப்பு குறைபாடு ஏதுமின்றி முழுமையாக இயக்கப்பட்டுள்ளது. பேருந்தில் எந்தவித இயந்திர கோளாறும் இல்லை. விபத்திற்கு காரணமான டிரைவர் பழனிச்சாமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.