திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த தலையாரிபட்டியை சேர்ந்தவர் இளமுருகன் (49). இவர், 1986-ம் ஆண்டு இறந்த தனது பாட்டி திருமலை அம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதுதொடர்பான விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து திருமலை அம்மாளுக்கான இறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக இளமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.


குழந்தைக்கு நாக்கு அறுவை சிகிச்சையின்போது பிறப்புறுப்பிலும் அறுவை சிகிச்சை செய்தது ஏன்? : மதுரை அரசு மருத்துவமனை ஓபன் டாக்!




அப்போது, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணியாற்றும் துணை தாசில்தார் ஜெயபிரகாஷ், சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளமுருகன் தான் கூலி வேலை செய்வதாகவும், தன்னால் அவ்வளவு பணத்தை தர இயலாது என தெரிவித்துள்ளார்.


வீடில்லை... விசாலமான உள்ளம் மட்டுமே... - தெருநாய்களுடன் குடைக்குள் குட்டித் தூக்கம் - வைரல் க்ளிக்


பின்னர் ஒரு வழியாக ரூ.3 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக இறப்பு சான்றிதழ் வழங்குவதாக ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். அந்த பணத்தை கொடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இளமுருகன், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் போலீசார் இளமுருகன் கொடுத்த புகார் உண்மை தானா? என விசாரணை நடத்தினர்.


அதில் துணை தாசில்தார் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.3 ஆயிரத்தை இளமுருகனிடம் கொடுத்து துணை தாசில்தாரிடம் கொடுக்கும்படி கூறினர்.




அவரும் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு நேற்று மாலை ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றுள்ளார். இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர்  நாகராஜன் தலைமையில் காவல் ஆய்வாளர் ரூபா கீதா ராணி மற்றும் போலீசார் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சாதாரண உடையில் மறைந்திருந்தனர். தொடர்ந்து அங்கு வந்த இளமுருகன், ஜெயபிரகாஷிடம் தான் கொண்டு வந்த பணத்தை கொடுத்தார்.


Coimbatore Day : கோயம்புத்தூருக்கு 218 வது பிறந்த நாள்: ஆர்ப்பரிக்கும் சில்லென்ற கோவையன்ஸ்...!


அதை அவர் வாங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜெயபிரகாசை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டிடத்துக்கு அவரை அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்ட நிலையில் அவரை அங்கிருந்து கைது செய்து அழைத்து சென்றனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண