திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே பெரியூர்பட்டி பிரசித்தி பெற்ற ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோவில் உள்ளது. இக் கோயில் திருவிழா கடந்த 5 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து காப்புகட்டி விரதம் தொடங்கியது. இக்கோவில் திருவிழா நேற்று முன்தினம் 11ஆம் தேதி ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தையில் ராஜ்குமார் என்பவர் தலைமையில் திருவிழா நடத்தப்பட்டது.
8 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 96 கிராமங்களும், 18 பட்டிக்கு கட்டுப்பட்ட ராஜகம்பளத்து நாயக்கர் இன மக்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கு வந்த முக்கியஸ்தர்களுக்கு நாயக்கர் இனபெண்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர். ஆண்களில் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும் தலையில் துண்டும் கட்டியிருந்தனர். திருவிழாவில் பொதில் போடுதல், சேர்வைஆட்டம், கும்மியடி மற்றும் தேவராட்டம் ஆடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய விழாவான நேற்று மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு ராஜகம்பளத்தார் முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டு பல்வேறு மந்தைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட சாமி மாடுகள் கோவில் முன்பாக அழைத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.
கோவிலிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொத்துகொம்பு எல்லைக்கு அனைத்து சாமி மாடுகளும் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து சாமி மாடுகள் மந்தைநாயக்கர் ஸ்ரீ மந்தையம்மன் கோவிலுக்கு ஓடிவந்து தரையில் போடப்பட்டு இருந்த வெள்ளை துணியை தாண்டும் நிகழ்வு நடந்தது. மூன்று முறை மாடுகள் மாலையை தாண்டியது. ஒவ்வொரு சாமி மாட்டுக்கும் எலுமிச்சை கனியை தெய்வகனியாக பரிசாக வழங்கப்பட்டது.
கரடுமுரடான பாதையில் சாமி மாடுகளுடன் ராஜகம்பளத்து நாயக்கர் இன ஆண்கள் காலில் செருப்பு அணியாமல் ஓடி வந்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றது. மாலை தாண்டுதலில் முதல், இரண்டாவது, மூன்றாவாதாக வந்த சாமி மாடுகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. திருவிழாவிற்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் ஒன்றிய கவுன்சிலர்களின் தேர்தல் முடிவு தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
அரசு நிலங்களை முறைகேடாக பட்டா போட்ட அதிமுக பிரமுகர் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,