வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜயின் 68 ஆவது படமாக உருவாகியுள்ளது தி கோட். பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், வைபவ், ஜெயராம், பிரேம்ஜி, மீனாக்‌ஷி செளத்ரி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய தி கோட் இன்று உலகளவில் 5000 திரையரஙகுகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சிகளுடன் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.


GOAT Box Office Prediction: விஜயின் பாக்ஸ் ஆஃபிஸ் வேட்டை..! தி கோட் படத்தின் முதல் நாள் வசூலே ரூ.100 கோடி? இலக்கு என்ன?




இந்த நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ராஜேந்திரா, உமா திரையரங்கம் மற்றும் ஆர்த்தி கிராண்ட் உள்ளிட்ட திரையரங்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் திரை படத்தை கொண்டாடும் விதமாக 20 க்கும் மேற்பட்ட பேனர்களை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மாநகராட்சி அனுமதி பெறாமல் திரையரங்குகள் முன்பு சாலை ஓரங்களில் வைத்தனர். இதனால்  திரையரங்கு முன் வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களையும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர், ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் சென்ற பின்பு இந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது.


ALSO READ | The GOAT Review: கொதிக்கும் ”The GOAT" ஜுரம்.. தெறிக்கவிட்டாரா விஜய்? முழு விமர்சனம் இதோ..




தி கோட் திரைப்படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் வத்தலகுண்டு பகுதிகளில் வாகனங்களில் கொடி கட்டி ஊர்வலமாக வந்து அட்ரா சிட்டி செய்த நிலையில் அவர்களின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று காலை முதல் விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் குவியத் தொடங்கினர். ஒன்று கூடிய விஜய் ரசிகர்கள் மோட்டார் பைக் மற்றும் கார்களில் தமிழக வெற்றி கழக கொடியை கையில் பிடித்துக் கொண்டு மதுரை மெயின் ரோடு மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் மோட்டார் பைக் மற்றும் கார்களில் ஊர்வலமாக சென்று சத்தமாக ஒலி எழுப்பி அட்ராசிட்டி செய்தனர்.  இதனையடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அதிவேகமாகச் சென்ற விஜய் ரசிகர்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வத்தலக்குண்டு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.