திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 8 வார்டுகளில் அ.தி.மு.க., 5 வார்டுகளில் தி.மு.க., தலா ஒரு வார்டில் தே.மு.தி.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் இருந்தனர். இங்கு தே.மு.தி.க. ஆதரவுடன் அ.தி.மு.கவை சேர்ந்த சாவித்திரி சுப்பிரமணியன் ஒன்றியக்குழு தலைவராகவும், அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திராசவடமுத்து துணைத்தலைவராகவும் பதவி வகித்தனர். இந்தநிலையில் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமாரிடம் 12 கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர். 


தேனி : கமிஷன் வர்ல.. கூட்டத்துக்கு நோ..! வைரலாகும் திமுக வார்டு கவுன்சிலரின் ஆடியோ!!




இதையடுத்து இன்று வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். இதில் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடந்தது. அப்போது அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்து கையை உயர்த்தினர்.


வயிற்று வலிக்கு மருத்துவமனையில் அட்மிட்! 2 மாதங்களாக எச்.ஐ.விக்கு சிகிச்சை..! அரசு மருத்துவமனையில் அவலம்..!




இதனால் தீர்மானம் நிறைவேறியது. ஒன்றியக்குழு தலைவர் சாவித்திரிசுப்பிரமணி, துணைத்தலைவர் சந்திராசவடமுத்து, கவுன்சிலர் தேன்மொழி தங்கராஜ் ஆகியோர் மட்டும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த 12 கவுன்சிலர்களும் கூட்டம் முடிந்ததும் ஒன்றாக ஒரு வேனில் ஏறி சென்றனர். இதனிடையே ஒன்றிய அலுவலகத்தின் முன்பு வேடசந்தூர் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன், நகர செயலாளர் கார்த்திகேயன், தெற்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஜீவா உள்பட தி.மு.க.வினர் திரளாக நின்று கொண்டு இருந்தனர்.




Rasi Palan Today, April 12: மேஷத்திற்கு புத்துணர்ச்சி... கும்பத்திற்கு தனவரவு... இன்றைய ராசிபலன்!


அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க என்று கோஷமிட்டனர். வேடசந்தூர் ஒன்றிய அலுவலக வளாகம் பதற்றமாக இருந்ததால்  அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவருக்கு எதிராக  அ.தி.மு.க. கவுன்சிலர்களே வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Sasikala: சசிகலாவின் கடைசி அஸ்திரம் காலி... அதிமுக பொதுச் செயலாளர் ரத்து செல்லும் என நீதிமன்றம் உத்தரவு!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண