நத்தம் அருகேயுள்ள கம்பளியம்பட்டியில் தனியார் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற அண்ணன், தம்பி இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கம்பளியம்பட்டி அருகேயுள்ள பொத்தகணவாய்பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன்கள் வெள்ளைச்சாமி (20) மற்றும் வள்ளியப்பன் (12) ஆகிய இருவரும் தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கம்பிளியம்பட்டியில் உள்ள டீக்கடையில் டீ பார்சல் வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திருமலைக்கேணி சாலையில் கம்பிளியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது செந்துறையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது.
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீஸார் இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வடமதுரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இருசக்கர வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மகன்களை இழந்த தந்தை கதறியபடி அழுதது அங்கு காண்போரை கண்கலங்க செய்தது.
சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. சீக்கிரமாக குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்வது விபத்து நடக்க காரணமாகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதும் பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகும். அதேபோல இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது விளையாட்டாக பேசிக்கொண்டே செல்வது. இதுவே விபத்துகளுக்கு வழி வகுக்கிறது. இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எங்கு, எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம்.
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
அதிகரித்திருக்கும் வாகன பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சாலை விதிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன. விபத்துகளில் காயமடைவதும், மரணங்களும் நிகழ்கின்றன. விபத்துகளை தடுப்பது நம் கைகளில்தான் இருக்கின்றன. சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அனைவரும் உணர வேண்டும்.