மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக அரசின் கலைஞர் கவினை திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசின் திட்டத்திற்கு பொட்டு வைத்து கண்ணாடி வைத்து தமிழக அரசு மாற்றியுள்ளது.  மத்திய அரசின் கவினை கலைஞர்களுக்கான திட்டத்தையே தமிழக அரசு தொடரலாம். தமிழக அரசு போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் தணிக்கை துறைக்கு அறநிலைத்துறை கோப்புகள் அளிக்கப்படவில்லை. 
முதல்வரின் மருமகன் அதானியை சந்தித்துள்ளார். கடந்த வாரம் கூட அதானியை முதல்வரை சேர்ந்த அதிகாரிகள் சந்தித்துள்ளனர். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். விஸ்வகர்மா திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சேர அனுமதிக்க வேண்டும். தமிழகம் பின்னோக்கி சென்றுள்ளது என தனிக்கை துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 


சபரீசனும் அதானியும் இதுவரை சந்திக்கவில்லை என முதல்வர் சொல்வாரா? அவ்வாறு சொன்னால் நாங்கள் ஆதாரத்தை வெளியிடத் தயார். டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளோம். டெல்லியில் நாளை நடைபெறும் சந்திப்புக்கு பின் நல்ல முடிவுடன் வருவோம். அதானி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்தது தவறு” எனத் தெரிவித்தார்.