திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சித்தரேவு ஊராட்சி அமைதி பூங்காவை சேர்ந்தவர் சடையாண்டி. இவரது மனைவி பொன்னுதாயி. இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். சடையாண்டி கூலித் தொழில் செய்து வருகிறார். மேலும் இரவு நேரத்தில் அமைதி பூங்கா பகுதியில் உள்ள வத்தலக்குண்டு வனச்சரகத்தில் உட்பட்ட வனத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் தினமும் இரவு தூங்குவது வழக்கம்.


தேனி மாவட்டத்தில் நடந்த திமுக உட்கட்சி தேர்தலில் பல்வேறு முனை போட்டிகள் உருவாகியுள்ள நிலையில் திமுக தலைமை அதிரடி முடிவு. தேனியில் யாருக்கு அந்த ஜாக்பாட் தெரியுமா?




இந்நிலையில்  இரவு வனத்துறை கட்டிடத்தில் தூங்கச் சென்றுள்ளார். இதையடுத்து  காலை சடையாண்டி வீட்டிற்கு வராததால் அவரை தேடி சென்ற உறவினர்கள் வனத்துறை கட்டிடத்தை பார்த்தபோது சடையாண்டி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் கொலையாளியை தேடிவந்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் கருணாகரன் என்பவரின் தம்பி கார்த்திக் சடையாண்டியின் பேத்தியை காதலித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சடையாண்டி இரண்டு தினங்களுக்கு முன்பு கார்த்தியை கண்டித்துள்ளார்.


சத்தத்தால் அதிர்ந்த மதுரை மாநகராட்சி கூட்டம் ; பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட மேயர் !




இதில் இருவருக்கும் தகராறு  ஏற்பட்டு சடையாண்டி கார்த்திக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கார்த்தியின் அண்ணன் கருணாகரன் (24) தம்பியிடம் தகராறு செய்த சடையாண்டியிடம் குடிபோதையில் இரவு தூங்கி கொண்டிருந்த இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அரிவாளால் சரமாரியாக நேற்று இரவு வெட்டி  படுகொலை  செய்யப்பட்டார். விசாரணையில்  பின்னர் காவல்துறையினர் கருணாகரனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். உடன்பிறந்த தம்பியை கண்டித்ததால் இக்கொலை சம்பவம் நடந்தது இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட சடையாண்டி தேசிய காடுகள் வளர்ப்பு திட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண