திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். விவசாயியான இவர், அப்பகுதியில் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அங்கு பசுமாடு ஒன்றையும் வளர்த்து வருகிறார். சினையாக இருந்த அந்த பசுமாடு நேற்று காலை கன்றுக்குட்டியை ஈன்றது. பொதுவாக கன்று, மாடுகளுக்கு நான்கு கால்கள் தான் இருக்கும். மாறாக பெருமாளின் பசுமாடு ஈன்ற கன்றுக்குட்டிக்கு 6 கால்கள் இருந்தன.


INDvsNZ 2ND ODI LIVE: ஹாமில்டன் மைதானத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியாளர்கள்


அந்த கன்றுக்குட்டியின் முன்பகுதியில் 2 கால்களும், பின்பகுதியில் 4 கால்களும் இருந்தன. இதனால் அந்த கன்று அதிசயமாக பார்க்கப்பட்டது. இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் நல்லமநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெருமாளின் தோட்டத்துக்கு கூட்டம் கூட்டமாக வந்து, அதிசய கன்றுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.


முதல் டீமாக வெளியேறிய கத்தார் அணி… போட்டியை நடத்தும் அணியே குரூப் சுற்றோடு வெளியேறிய சோகம்!


5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: தண்டனையாக தோப்புக்கரணம் போட சொன்ன பஞ்சாயத்து! அதிர்ந்த காவல்துறை


இதற்கிடையே அந்த அதிசய கன்று சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தண்ணீர்பந்தம்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இறந்த கன்றுக்குட்டியை பரிசோதனை செய்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண