தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் நாராயணசாமி சுமத்திரா தம்பதி. இவர்களுக்கு  மதுமிதா 26 வயதுடைய மகள் இருந்தார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். தாய், தந்தையர் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தாய் சுமித்ரா மற்றும் மகள் மதுமிதாவும் இருவரும் நேற்று மாலை விஷமருந்து அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.


பிரச்சனை நடந்து நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்த நிலையில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து கொண்டு வீட்டின் வெளியில் வந்தபோது இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இருவரையும்  மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனை  கொண்டு சென்ற போது மதுமிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.




 தாய் சுமத்திரா சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துக் கொண்டார். இறந்த மதுமிதாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக தற்போது லட்சுமிபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு தாய் சுமத்திரா வந்து மதுமிதாவின் இறுதிச்சடங்கை முடித்துள்ளார். லட்சுமிபுரம் பகுதியில் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து தற்போது பயிற்சியில் மருத்துவராக இருந்து வரும் ஒரு மாணவி குடும்பப் பிரச்சனைக்காக தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இத்தகவல் அறிந்த  பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முதல் கட்ட விசாரணையில் நாராயணசாமி அவரது மனைவி சுமத்திரா இடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதும் குடிபோதையில் நேற்று தகராறு செய்ததால் மனம் உடைந்த சுமித்திராவும் அவரது மகள் பயிற்சி மருத்துவர் மதுமிதா ஆகியோர் மன விரக்தியில் விஷ மருந்து அருந்தியது பெரிய வந்துள்ளது.


மேலும் பெற்றோரின் கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த தாயும் மகளும் தற்கொலை செய்து கொள்ள விஷம் அருந்தியதால் மகள் உயிரிழந்து உள்ளார். வருங்காலத்தில் மருத்துவராக பணியாற்றி பல்வேறு மனித உயிர்களை காப்பாற்ற வேண்டிய ஒரு மருத்துவரை இழந்திருப்பது பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியில் மருத்துவரை  இழந்த துயரச்சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண