INDvsNZ 2ND ODI LIVE: தொடர் மழை.. மோசமான வானிலை..! கைவிடப்பட்டது 2வது ஒருநாள் போட்டி..! ரசிகர்கள் ஏமாற்றம்..
INDvsNZ 2ND ODI LIVE: இந்தியா - நியூசிலாந்து மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
ABP NADU Last Updated: 27 Nov 2022 12:38 PM
Background
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில்...More
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஆனால், ஈரப்பதம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதன்பின்பு டாஸ் போடப்பட்டது. இதில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. கடந்த போட்டியில் இந்திய அணியில் கேப்டன் தவான், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அபாரமாக ஆடினர். இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தும், நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் அபாரமாக ஆடியதால் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கடந்த போட்டியில் இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் தவிர மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். இதனால், இன்றைய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். கடந்த சில போட்டிகளாகவே பேட்டிங்கில் திறம்பட செயல்படாத ரிஷப்பண்ட் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியும் பந்துவீச்சை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்குமா? அல்லது நியூசிலாந்து வென்று டி20 தொடர் தோல்விக்கு பழிதீர்க்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தொடர் மழை.. மோசமான வானிலை..! கைவிடப்பட்டது 2வது ஒருநாள் போட்டி..! ரசிகர்கள் ஏமாற்றம்..
ஹாமில்டனில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.