தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது.
இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் மதுரையில் உசிலம்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவி இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 497 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர். தனது குடும்பத்தின் ஆசைப்படி மருத்துவர் ஆவேன் என பேட்டியளித்துள்ளார்.
கூலித் தொழிலாளி மகள் சாதனை