தமிழ்நாடு காவல்துறை சார்பாக ஆணழகன் பட்டத்தை பெற்றதன் மூலம் தமிழ்நாடு அரசின் 5 லட்சம் ரொக்க பரிசையும் பெற உள்ளார்.


மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் பகுதியை சேர்ந்தவர்  சிவா. இவர்  ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவர் பருவத்தில் இருந்தே தன் உடலை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர் மாவட்ட அளவிலான பல்வேறு ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு  ஆணழகன் பரிசை பெற்றுள்ளார். பின்னர் தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து தற்போது ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மத்திய பிரதேஷ் பூனே நகரத்தில் நடந்த 71வது தேசிய அளவில் நடைபெற்ற காவலர்களுக்கான ஆணழகன் போட்டியில் முதலிடத்தை அடைந்து தமிழகத்திற்கு தங்கப் பதத்தை வென்று கொடுத்த மதுரை காவலர் சிவா பெருமை சேர்த்துள்ளார்.






வருடம் தோறும் காவலர்களுக்கான ஆணழகன் போட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் இதில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த காவலர்கள் கலந்து கொள்வார்கள். 10 பத்து வகையான எடை பிரிவு போட்டி நடைபெறும் இதில் தமிழகத்திலிருந்து தமிழக காவல்துறை சார்பாக சென்னை மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் இந்த வருடம் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் 60 கிலோ எடை  பிரிவில் மதுரை காவலர் சிவா கலந்து கொண்டார். இறுதி கட்ட போட்டியில் தமிழ்நாடு மணிப்பூர் உத்தரகாண்ட் சேர்ந்த காவலர்கள் கடும் போட்டி நிலவியது இதில் முதல் பரிசாக தமிழகத்தின்  காவலர் ஆணழகன் என்ற பரிசை காவலர் சிவா பெற்றார். இதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரின் நடைபெற்ற காவலர்களுக்கான ஆணழகன் போட்டியில் முதல் பரிசு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




இரண்டு வருடம் கொரோனா தொற்றால் நடைபெறாமல் இருந்த போட்டியில் 2022 ஆம் ஆண்டு போட்டியில் கலந்து கொண்டு மீண்டும் பரிசை பெற்றுள்ளார். இந்த ஆணழகன் போட்டியை வென்றதன் மூலம் தமிழ் நாடு அரசு காவலர் சிவாவுக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதி ரொக்க பரிசு வழங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. காவலர்களுக்கான ஆணழகன் போட்டியில் வென்று தமிழ்நாடு திரும்பிய காவலர் சிவாவை மதுரை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வாழ்த்துக்கள்தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிவக்குமார், சவுந்தர பாண்டியன், மற்றும் ஆண்ட்ரூஸ். ஆகியோர் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண