நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாப்டர் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யும்படி பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டார். இதற்கு மாவட்டம் வாரியாக பொறுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.
'இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்' - ஆதாரத்தை கண்டு பிடித்த அரசுப்பள்ளி மாணவி
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு இணை இயக்குனர் ஜெயக்குமார் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,979 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகள் அனைத்தையும் ஆய்வு செய்யும்படி முதன்மை கல்வி அதிகாரி கருப்புசாமி நேற்று உத்தரவிட்டார். இதற்காக குறுவள மைய அளவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்ட 101 குழுக்கள் அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்தனர். அப்போது பள்ளிகளில் இடித்து அகற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கும் ஆபத்தான கட்டிடங்கள், பராமரிப்பு மேற்கொள்ள வேண்டிய கட்டிடங்கள், பள்ளிகளுக்கு புதிதாக தேவைப்படும் கட்டிடங்கள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் உள்பட அனைத்தையும் ஆய்வு செய்தனர்.
யூடியூப்பில் வீடியோக்களை காணதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி மர்மமான முறையில் தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதில் திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நேருஜி நினைவு மாநகராட்சி பள்ளி ஆகியவற்றில் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து இருந்ததை குழுவினர் கண்டறிந்தனர். அதேபோல் நகரில் பிற பள்ளிகளிலும் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதையடுத்து ஆபத்தான கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.