மத்திய அரசின் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களான  ஜிஎஸ்டி வரி 5% விதிப்பை தொடர்ந்து கடந்த ஜூலை 18ஆம் தேதி முதல் தனியார் நிறுவன பால் பொருட்கள் தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை 15 சதவிதம் அளவிற்கு உயர்த்தி் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனமும் இன்று முதல் தயிர், லஸ்ஸி, நெய் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தியுள்ளதாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 


அதன்படி ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள விலை உயர்வு அறிக்கையில் : 


Presidential Election Result 2022: இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராகிறார் திரெளபதி முர்மு..!




ஆவின் தயிர் 100கிராம் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயும், நெய் 1 லிட்டர் ஜார் 535 ரூபாயிலிருந்து 580 ரூபாயாகவும், 15 கிலோ நெய் டின் 8680 ரூபாயிலிருந்து 9680 ரூபாயாகவும், 15 மில்லி நெய் பாக்கெட் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும், 1 கிலோ பிரிமீயம் தயிர் 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய்க்கும், 200 மில்லி மேங்கோ  லஸ்ஸி 23 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும், 200 மில்லி மோர் பாக்கெட்  விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பால் பொருட்களும் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக புதிய விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.


AjithKumar61: மீண்டும் லீக் ஆன AK61 சீன்ஸ்? இதிலும் இந்த சீன் இருக்கா? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்..




Commonwealth Games 2022: 1934- 2018 வரை..! காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சாதித்தது என்ன..?


இதுகுறித்து வீடியோ மூலமாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல முறை பால் பொருட்களுக்கான விலையானது வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்ட நிலையிலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை எனவும், உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.