இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகிறார் திரெளபதி முர்மு


குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்காரணமாக புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதனையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், முன்னாள் ஜார்கண்ட் மாநில ஆளுநருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார்.




எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவரான யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டார். கடந்த 18-ஆம் தேதி ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.






அந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. முன்பாக எண்ணப்பட்ட 748 வாக்குகளில் திரெளபதி முர்மு  540 வாக்குகளும், 208 வாக்குகளும் பெற்றிருந்தனர்  தொடர்ந்து 2-ஆம் சுற்று நிறைவில், திரெளபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு 4,83,299-ஆக இருந்தது.


இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராகிறார் திரெளபதி முர்மு..!



மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்த வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு. அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777.  எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகளின் மதிப்பு 2,61,062 ஆக இருக்கிறது.




மூன்று சுற்றுகளிலும் திரெளபதி முர்மு முன்னிலை பெற்றதால் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது. இதன் மூலம் அவர்  இந்தியாவின் 15-ஆவது குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார். 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண