ஒரு மாதத்திற்கும் மேல் நிறுத்தி வைக்கப்பட்ட ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேவில் நடைபெற்று வரும் நிலையில் ஏகே 61 படக்காட்சிகள் என சோஷியல் மீடியாவில் சில வீடியோக்கள் வைரலாகி வருகின்றன



சென்னை:


சென்னையில் நடைபெற்ற “வலிமை” ஷூட் ஏற்கனவே லீக் ஆன நிலையில், புனேக்கு “ஏகே61” ஷூட்டிங்கை மாற்றினார் இயக்குநர் ஹெச்.வினோத். இந்நிலையில் தற்போது ஏகே 61 படக்காட்சிகள் என சோஷியல் மீடியாவில் சில வீடியோக்கள் வைரலாகி வருகின்றன


ஐரோப்பா பைக் டூர்:




ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஏகே 61 ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், திடீரென அங்கே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, நடிகர் அஜித் ஐரோப்பாவிற்கு பைக் டூர் சென்றார். அங்கே ரசிகர்களை சந்தித்தது, நண்பர்களுடன் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டதும், லண்டன் கடை ஒன்றில் பெண் ஒருவருக்காக வழி விட்ட வீடியோ என ஏகப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரல் ஆகின.


புனேவில் படப்பிடிப்பு:




ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், வீரா, ஜான் கோக்கன் என பலர் நடித்து வரும் ஏகே61 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெற உள்ள தகவல் முன்னதாக கசிந்திருந்த நிலையில், தற்போது அங்கே படப்பிடிப்பை ஆரம்பித்து இருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத்.


வீடியோ லீக்:


#AK61 Shooting Some Stunt Sequence 🔥😎


தற்போது புனே பாலத்தின் மீது இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் அவரது டீம் நடத்தி வரும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் சென்னையில், நடைபெற்ற நிலையில், கசிந்தன. அதன் காரணமாகவே தற்போது புனேவுக்கு ஷூட்டிங்கை இயக்குநர் மாற்றி இருந்தார். ஆனால், அங்கே இருந்தும் இப்படி போட்டோக்களும், வீடியோக்களும் லீக் ஆவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


மீண்டும் பைக் சீன்:


அஜித் ஒரு பைக் விரும்பி என்பது அனைத்து தெரியும். வலிமை படத்தையே அதற்கேற்றவாரே செய்து படமாக்கி இருந்தார் இயக்குநர் ஹெச். வினோத்.


தற்போது ஏகே61-ல் லீக் ஆன சீன்களிலும் பைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவது போல் இருக்கிறது. வெளியான வீடியோக்கள் மூலம் கதை சொல்லி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.


வாரிசு லீக்:


வாரிசு பட காட்சிகள் என சில சீன்கள் வெளியாகி வைரல் ஆன நிலையில், அது விஜய் தேவரக்கொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் 2018-ல் வெளி வந்த “கீதா கோவிந்தம்” என தெரியவந்தது. அதுபோல லீக் ஆனது ஏகே61 தானா அல்லது வேறு திரைப்படமா என்பது கேள்வி எழுப்பியுள்ளது.


தீபாவளிக்கு ரிலீஸ்?


ஜூலை மாதமே மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டால், அறிவித்தபடியே வரும் தீபாவளிக்கு ஏகே61 படம் வெளியாகுமா? என்கிற எதிர்பார்ப்புடன் அஜித் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர். படத்தை பொறுமையா கூட ரிலீஸ் பண்ணுங்க, முதலில் ஒரு அப்டேட்டை கொடுங்க என அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.