பழனியருகே மது அருந்த சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்து விட்டு , விபத்து என மருத்துவமனையில் அனுமதித்து நாடகமாடிய நபரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி


திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரது மகன் முத்து பிரவீன் குமார்(25). இவர் நேற்று நள்ளிரவு கருப்பணகவுண்டன் வலசு அருகே விபத்தில் சிக்கியதாகக்கூறி படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி முத்து பிரவீன் குமார் உயிரிழந்தார். இந்நிலையில் முத்து பிரவீன் குமார் தலை, கழுத்து, கன்னம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள காயம் விபத்தால் ஏற்பட வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!




சந்தேக மரணமும்,கொலை சம்பவமும்


இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,  முத்து பிரவீன் குமாரும், அவரது மனைவியின் முதல் கணவரான மாரிமுத்து என்பவரும் இணைந்து நேற்று நள்ளிரவு பழனி அருகே உள்ள கருப்பணகவுண்டன் வலசு பகுதியில் மது அருந்தியதும், அப்போது அவர்கள் இருவரிடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டதும்,  அப்போது முத்து பிரவீன் குமாரை மாரிமுத்து பாட்டிலால் கடுமையாக தாக்கியதும் தெரியவந்தது.


Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!


மேலும் படுகாயத்துடன் போதையில் இருந்த முத்து பிரவீன் குமாரை அவ்வழியே சாலையில் வந்த ஒரு கார் மீது தள்ளிவிட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து முத்து பிரவீன் குமார் விபத்தில் சிக்கியதாக 108ஆம்புலன்ஸிற்கு மாரிமுத்து  தகவல் கொடுத்து, பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததும் தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முத்து பிரவீன் குமார் உயிரிழந்தார். தொடர்ந்து முத்து பிரவீன் குமாரை கொலை செய்த மாரிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.