திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மருத்துவர் வீட்டில் கொள்ளை தொடர்பாக மேலும் ஒருவர் கைது. தலைமறைவாக உள்ள கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பழனியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வீட்டில் 100 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் பணம் கடந்த 14 ம் தேதி திருடு போனது. மருத்துவர் உதயகுமார் வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கட்டிப்போட்டு தாக்கி நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளை சம்பம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் போலீசார் ஐந்து தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
Kodanad Case: கோடநாடு வழக்கு; எடப்பாடி ஜோதிடரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி திட்டம் - என்ன காரணம்?
இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த தடயங்கள் மற்றும் தகவலின் பேரில் பழனியைச் சேர்ந்த சரவணன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் விசாரணையில் சரவணன் கொடுத்த தகவலின் பெயரில் மருத்துவர் உதயகுமார் வீட்டில் நுழைந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சரவணிடம் இருந்து 34 சவரண் தங்க நகைகள்,5 கிலோ வெள்ளி மற்றும் ஏழு இலட்சம் ரூபாய் பணம் மற்றும் கார் ஒன்றும், இரண்டு இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்துடன் தலைமறைவாகியுள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
12th Public Exam Result: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 8ம் தேதி ரிசல்ட் - எப்படி தெரிந்து கொள்வது?
இந்த நிலையில் மருத்துவர் உதயகுமார் வீட்டில் கொள்ளையடித்த நபர்களில் ஒருவனான நெல்லையை சேர்ந்த சங்கு ராஜா என்பவனை போலீசார் பிடித்துள்ளனர். பிடிபட்ட சங்கு ராஜாவிடமிருந்து 15 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது சங்குராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்