திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கூவனூத்து  அருகே கவராயபட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் கம்பளத்தார் நாயக்கர், குஜ்ஜ பொம்மு நாயக்கர் சமூகத்தினரால் தொன்று தொட்டு வணங்கி வரும் ஸ்ரீ முத்ததாத்தன் திருக்கோவிலில் மாலை கும்பிடு விழா  2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். சில காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக விழா நடத்தப்படவில்லை.  13 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வெகு விமர்சியாக விழா நடைபெற்றது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 16ம் தேதி சாமி சாட்டுதல்  நிகழ்ச்சியுடன்  துவங்கியது.


LSG vs MI, IPL 2023 Eliminator Live:டாஸ் வென்ற மும்பை.. பேட்டிங் செய்ய முடிவு! எலிமினேட்டர் போட்டியில் லக்னோ உடன் பலப்பரீட்சை...!




மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருதோட்டம் நிகழ்ச்சி நேற்று 24.05.2023 நடைபெற்றது.  முன்னதாக இவ்விழாவில் திருச்சி, கரூர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆக்கல் நாயக்கர் மந்தை, நல்லதொப்பன் நாயக்கர் மந்தை, கோலாகா பிலி மந்தை, கோணத்தாத மந்தை, சின்னக்காட்டு பப்பிநாயக்கர் மந்தை, சின்னமன்னநாயக்கர் மந்தை, ராஜா கோடங்கி நாயக்கர் மந்தை உள்ளிட்ட 7 மந்தைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வளர்ப்பு காளைகள்.  


CM Stalin: 'தமிழர் வாழாத நாடு இந்த பூமியிலே இல்லை.. தமிழர்களுக்கு தி.மு.க. அரசு கலங்கரை விளக்கம்' - சிங்கப்பூரில் மு.க.ஸ்டாலின்




Lee Kuan Memorial Statue: ’சிங்கப்பூரின் தந்தை’ லி குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!


கோவில் முன்பாக நடைபெற்ற எருது சந்திப்பு நிகழ்ச்சியில் பாரம்பரிய முறையில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கொத்து கொம்புவிற்கு காளைகள் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இந்த காளைகள்  கொத்து கொம்புவில் இருந்து தோரணவாயிலை நோக்கி அவிழ்த்து விடப்பட்டது. இதில் முதலாவதாக வந்த காளைக்கு மஞ்சள் தூவி, எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் தேனி, திண்டுக்கல், போடி,  உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண