LSG vs MI, IPL 2023 Eliminator Live: லக்னோ ஆல் அவுட்! 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி!

IPL 2023 Eliminator, MI vs LSG: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 24 May 2023 11:21 PM
LSG vs MI, IPL 2023 Eliminator Live: லக்னோ ஆல் அவுட்; மும்பை அணி வெற்றி!

மும்பை இந்தியன்ஸ் அணியின் அபார பந்துவீச்சால் லக்னோ அணி 100 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது தகுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறியது மும்பை.

LSG vs MI, IPL 2023 Eliminator Live: நவீன் அவுட் - மும்பையின் பவுலிங்கில் லக்னோ தடுமாற்றம்!

லக்னோ அணி 9 விக்கெட்களை இழந்து 100 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

LSG vs MI, IPL 2023 Eliminator Live: ரவி பிஷ்னோய் அவுட்!

ரவி பிஷ்னோய் அவுட். லக்னோ அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 100 ரன் எடுத்து வெற்றிக்காக போராடி வருகிறது.

LSG vs MI, IPL 2023 Eliminator Live: 7 விக்கெட்களை இழந்த லக்னோ!

லக்னோ அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 93 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

LSG vs MI, IPL 2023 Eliminator Live: 40 ரன்களில் ரன் அவுட்டான ஸ்டோய்னிஸ் - தோல்வியை நோக்கி லக்னோ அணி

லக்னோ அணி வீரர் ஸ்டோய்னிஸ் 40 ரன்களில் ரன் அவுட்டானார் - 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அந்த அணி தோல்வியை நோக்கி பயணிக்கிறது.

LSG vs MI, IPL 2023 Eliminator Live: டக் அவுட்டான நிக்கோலஸ் பூரண் - கெத்து காட்டிய ஆகாஷ் மத்வால்

 டக் அவுட்டானார் நிக்கோலஸ் பூரண் - ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி ஆகாஷ் மத்வால்  அபாரம் 

LSG vs MI, IPL 2023 Eliminator Live: ஒரு ரன்னில் வெளியேறினார் பதோனி

லக்னோ அணி வீரர் பதோனி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த அணி 9.4 ஓவர்களில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

LSG vs MI, IPL 2023 Eliminator Live: 3 விக்கெட்டை இழந்தது லக்னோ அணி... கேப்டன் க்ருணால் பாண்ட்யா அவுட்

லக்னோ அணி வீரர் க்ருணால் பாண்ட்யா 8 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

LSG vs MI, IPL 2023 Eliminator Live: 8 ஓவர்களில் லக்னோ அணி 68/2

மும்பை அணியின் அபார பந்துவீச்சால் ரன் குவிக்க முடியாமல் திணறும் லக்னோ அணி - 8 ஓவர்களில் லக்னோ அணி 68/2  மட்டுமே எடுத்துள்ளது. 

LSG vs MI, IPL 2023 Eliminator Live: நிதானமாக ஆடும் லக்னோ அணி.. விக்கெட் எடுக்கும் முனைப்பில் மும்பை

லக்னோ அணி பவர்பிளே முடிவில்  2 விக்கெட் இழப்புக்கு  54 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுக்கும் முனைப்பில் மும்பை அணி பந்து வீசி வருகிறது

LSG vs MI, IPL 2023 Eliminator Live: தொடக்க விக்கெட்டுகளை விரைவாக இழந்த லக்னோ அணி

183 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் கைல் மேயர்ஸ், ப்ரீரேக் மன்கட் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

LSG vs MI, IPL 2023 Eliminator Live: கிறிஸ் ஜோர்டன் அவுட்!

மும்பை வீரர் கிறிஸ் ஜோர்டன் அவுட்.. மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

LSG vs MI, IPL 2023 Eliminator Live: 5வது விக்கெட்டை இழந்த மும்பை அணி - சரியும் ரன் வேகம்

பந்துவீச்சில் மிரட்டும் லக்னோ அணி... சீரான இடைவெளியில் 5வது விக்கெட்டை இழந்தது மும்பை அணி. திலக் வர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். 

LSG vs MI, IPL 2023 Eliminator Live: 15 ஓவர் முடிவில் மும்பை ஸ்கோர் நிலவரம்!

மும்பை இந்தியன்ஸ் அணி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

LSG vs MI, IPL 2023 Eliminator Live: ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணி

மும்பை அணியில் 4வது விக்கெட் வீழ்ந்தது. கேமரூன் க்ரீன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். மும்பை அணி 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது. 

LSG vs MI, IPL 2023 Eliminator Live: சூர்யகுமார் யாதவ் அவுட் .. அதிர்ச்சியில் ரசிகர்கள்

மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

LSG vs MI, IPL 2023 Eliminator Live: 10 ஓவர்களில் 98 ரன்களை குவித்த மும்பை அணி

மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 10 ஓவர்களில் 98 ரன்களை குவித்துள்ளது. கேமரூன் க்ரீன் 41 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 22 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 

LSG vs MI, IPL 2023 Eliminator Live: 100 டாட் பால்கள்...50 ஆயிரம் மரங்கள்

ஐபிஎல் போட்டியில் ஒரு டாட் பாலுக்கு 500 மரங்கள் நடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 100 டாட் பால்கள் இதுவரை போடப்பட்டுள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் மரங்கள் நடப்பட உள்ளது. 

SG vs MI, IPL 2023 Eliminator Live: பவர்பிளே முடிவில் மும்பை அணி 62/2

லக்னோ அணிக்கு எதிராக பவர்பிளே ஓவர்களில் (6 ஓவர்கள்) மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை எடுத்துள்ளது.

LSG vs MI, IPL 2023 Eliminator Live: 2வது விக்கெட்டை இழந்தது மும்பை அணி.. இஷான் கிஷன் அவுட்..!

லக்னோ அணிக்கு எதிராக மும்பை அணி தனது 2வது விக்கெட்டை இழந்தது மும்பை அணி.. இஷான் கிஷன் 15 ரன்களில் அவுட்டானார்

LSG vs MI, IPL 2023 Eliminator Live: ரோஹித் சர்மா அவுட்!

ரோஹித் சர்மா 9 ரன்னுக்கு நவீன் உல்லக் பந்தில் ஆயுஷ் போதானியிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.

LSG vs MI, IPL 2023 Eliminator Live: ஆட்டத்தின் முதல் சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மா!

தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மா சிக்ஸர் அடித்துள்ளார்.

LSG vs MI, IPL 2023 Eliminator Live: மும்பை அணி பேட்டிங்!

டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, இஷான் கிசான் பேட்டிங் செய்து வருகின்றனர்.


 

LSG vs MI, IPL 2023 Eliminator Live: ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்கு தொடரும் சோகம்

கடந்த சீசனில் தான் லக்னோ அணி ஐபிஎல் தொடரில் அறிமுகமானது. ஆனால் 2 சீசன்களிலும் லக்னோ அணியுடன் மோதிய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதே கிடையாது. இந்த வரலாறு இப்போட்டியில் மாற்றி எழுதப்படும் என மும்பை அணி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

LSG vs MI, IPL 2023 Eliminator Live: எலிமினேட்டர் போட்டியில் ஜெயிக்கும் அணிக்கு காத்திருக்கும் சவால்..!

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குச் செல்லாது. மாறாக மே 26 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத் அணியுடன் மோத வேண்டி உள்ளது. 

LSG vs MI, IPL 2023 Eliminator Live: எலிமினேட்டர் போட்டியில் வெளியேறப்போவது யார்?

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றது. 

Background

IPL 2023 Eliminator, MI vs LSG: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.


எலிமினேட்டர் போட்டி:


ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்று தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்து முடிந்த முதல் குவாலிபையர் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் அணியை வீழ்த்தி, சென்னை அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து, அகமதாபாத்தில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள குஜராத் அணியுடனான இரண்டாவது குவாலிபையர் போட்டியில் மோத உள்ள அணி யார் என்பதை உறுதி செய்யும், எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெற உள்ளது.


லக்னோ - மும்பை பலப்பரீட்சை:


புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் நான்காவது இடங்களை பிடித்த லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள், இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.


பலம், பலவீனம்:


மும்பை அணியை பொறுத்தவரையில் எந்தவொரு ஸ்கோரை சேஸ் செய்யும் அளவிற்கு பேட்டிங்கில் வலுவாக உள்ளது. ஆனால், பந்துவீச்சு மிகவும் மோசமாக இருப்பது கவலை அளிக்கிறது. லக்னோ அணி டி-காக், ஸ்டோய்னிஷ் மற்றும் பூரானை பேட்டிங்கில் அதிகம் சார்ந்துள்ளது. அவர்கள் சிறப்பாக செயல்படுவது அவசியமாக உள்ளது. அதேநேரம், லக்னோ மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளுமே கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் வென்று, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதே உத்வேகத்தில் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன. ஆனால், பிளே-ஆஃப் சுற்றில் பலமுறை விளையாடிய அனுபவம் இருப்பது மும்பை அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.  


மைதானம் எப்படி?


சேப்பாக்கம் மைதானம் நடந்து முடியும் ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் தொடர்ந்து நிதானமாக மாறி வருகிறது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில், பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடி ரன் குவிக்க சிறிது நேரம் தேவைப்படும். முதலில் பேட்டிங் செய்வது எந்தவொரு அணிக்கும் சாதகமானதே, அதிலும் 165 ரன்களுக்கு அதிகமாக குவிப்பது அவசியமாகும். 


சிறந்த பேட்ஸ்மேன்:


சேப்பாக்கம் மைதானத்தில் ரன்களை குவிப்பது என்பது பேட்ஸ்மேன்களுக்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது. சுழற்பந்துவீச்சாளர்களை திறம்பட எதிர்கொண்டால் மட்டுமே ரன்களை குவிக்க முடியும். அந்த வகையில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்கப்படுகிறது. நடப்பு தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 511 ரன்களை குவித்துள்ளார்.


சிறந்த பந்துவீச்சாளர்:


சென்னை அணியின் சூழலை பொருத்தமட்டில் லக்னோ அணியின் ரவி பிஷ்னோய் பந்து வீச்சாளர், மும்பை அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. நடப்பு தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


கணிப்பு: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வாய்ப்பு அதிகம்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.