உணவகத்தின் மூலம் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்கள், வண்டி தொழிலாளர்கள், முதியோர்கள், லாரி ஓட்டுநர்கள் என அனைத்து தரப்பினர் பயன்பெறுகின்றனர். திமுக ஆட்சியின் தொடக்கத்தில், சென்னையில் அம்மா உணவகத்தை தி.மு.கவினர் சிலர் சூறையாடினர். அங்கிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேனர்கள் கிழிக்கப்பட்டன. அதன் வீடியோ வெளியே அனைத்து தரப்பினருமே பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.கவினர் கட்டம் கட்டப்பட்டனர்.  இப்படி அம்மா உணவகத்தை சுற்றி அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.





 






 

இந்நிலையில் மதுரை மாநகராட்சி 14வது வார்டுக்கு உட்பட்ட புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதிக்கப்படாத பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி,  ஆம்லேட் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளை விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், விற்பனைக்கான கணக்கிலும் முறைகேடு செய்ததாகவும் எழுந்த புகாரின் கீழ் மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் நேரில் விசாரணை நடத்தினர்.

 


இதனையடுத்து புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டு உறுதியான நிலையில் புதூர் அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவுகளை விற்பனை செய்த மகளிர் குழு ஒப்பந்தம் ரத்து செய்ய மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும்,  விரைவில் புதிய மகளிர் குழுவிற்கு ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளதாக உதவி ஆணையர் தகவல் அளித்துள்ளார். இன்றோ அல்லது நாளையோ புதிய மகளிர் குழுவினர் நியமிக்கப்பட்டு பின்னர் முறைகேட்டிற்கு உறுதுணையாக இருந்த  மகளிர்குழுவினருக்கான அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.



புதூர் அம்மா உணவகத்தில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 14வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் சுய உதவிக்குழுவினரை பகடைக்காயாக தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திவிட்டதாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கின்றனர். மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவினரை உருவாக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.