நகர்புற உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாடு முழுவதும் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பெண்கள், திருநங்கைகள், இளைஞர்கள், பட்டதாரிகள், உழைப்பாளிகள் என தேர்தல் களம் வண்ணமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் சுயேச்சை வேட்பாளராக களம் காணும் இளைஞருக்கு அரசியல்கட்சிகள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுவதாக புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு செந்தில்குமார் என்ற 25 வயதுடைய இளைஞர் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பில் இருந்தே தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதாகவும், தற்போது கொலை மிரட்டல் அளவிற்கு வளர்ந்துவிட்டதாகவும் வேதனை தெரிவிக்கிறார்.
"தி.மு.க., வை சேர்ந்த ஜெயசந்திரன் என்பவர் கடந்த 25 வருடங்களாக எங்கள் பகுதியில் அரசியலில் உள்ளார். இந்நிலையில் நடைபெற உள்ள தேர்தலில் சுயேச்சையாக நான் போட்டியிட உள்ளேன் என்பதை தெரிந்து கொண்ட அவர், அதிகாரிகளின் உதவியோடு என்னுடைய வாக்கு உட்பட என் குடும்பத்தினர் ஓட்டுகளை வேறு வார்டுகளுக்கு மாற்றிவிட்டனர்.
இந்நிலையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்து எங்களது வாக்குகளை எனது வார்டுக்கே மாற்றிவிட்டேன். பின்னர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்து தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறேன். என்னை வாபஸ் பெறசொல்லி மிரட்டல் வந்தது. ஆனாலும் நான் பின்வாங்கவில்லை. தொடர்ந்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் எனக்கு கொலை மிரட்டல் விடுவது போல் இரவு நேரங்களில் ஆட்கள் என் வீட்டுக்கு வந்து செல்கின்றனர். இதனால் என் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். தி.மு.க வடக்கு மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ஜெயசந்திரன் தூண்டுதலின் பெயரில் தான் இவ்வாறு நடக்கிறது. எனவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கி ஜனநாயாகத்தை காப்பாற்ற வேண்டும்" என சுயேச்சை வேட்பாளர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -watch video | நான் செத்துட்டா நீங்க தான் மாலை போடனும் கதறி அழுது வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்