ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளில் சுற்றலாத்துறை, கடற்படை வீரர்கள், மற்றும் மாணவர்கள் உற்சாக பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் மாத 3ஆவது சனிக்கிழமை உலக கடற்கரை தூய்மை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடற்கரை பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்வது, கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பது குறித்து விழிப்புணா்வு பிரசாரம், செயல்முறை விளக்கம் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கடலோர காவல்படையினா், தொண்டு நிறுவனத்தினா், அரசுத் துறையினா் ஈடுபடுவது வழக்கம்.




ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த சங்குமால் கடற்கரையில் உள்ள குப்பைகளை பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணியினை ராமேஸ்வரம் சுற்றுலாத்துறை, கடற்படை பிரிவு (ராமேஸ்வரம்) மற்றம் ஓலைக்குடா மீனவ மக்கள்  ஆகியோர் இணைந்து நடத்தினர். பாரத பிரதமர் அவர்கள் இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரகப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளில்  சுற்றுப்புற சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராமநாதபுரம் மாவடடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாகவும், பழமை வாய்ந்த புனிதத்தளமாகவும் ராமேஸ்வரம் விளங்குகின்றது. ஆண்டுதோறும் சராசரியாக 1 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், யாத்திரிகர்கள் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.  




அதனடிப்படையில், ராமேஸ்வரம் சுற்றுலாத்துறை, கடற்படை பிரிவு (ராமேஸ்வரம்) மற்றம் ஓலைக்குடா மீனவ மக்கள்  என அனைவரும் இணைந்து ராமேஸ்வரம்  அடுத்த சங்குமால் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர். கடற்கரையை சுத்தம் செய்ததில் சுமார் 600  கிலோ  மக்காத குப்பைகள் அகற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், தன்னார்வளர்கள், சுற்றுலாத்துறை அதிகாரிகள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். பொதுவாகவே, எப்போதும், கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கடலில் சென்று சேருவதால், கடல்வாழ் உயிரினங்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. அது இயற்கை சூழலை பாதிக்கும். எனவே, ஆண்டுக்கு ஒரு சில தினங்கள்  என்றில்லாமல், எப்பொழுதும் நாம் கடற்கரை பகுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் எழ வேண்டும்.


ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி-கணவரிடம் இருந்து மகனை மீட்டுதர கோரிக்கை