திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சுவீடு, பள்ளங்கி கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை  தடுப்பதற்கு பல முறை மனு அளித்தும் வன துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி  கிராம விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கொடைக்கானலுக்கு செல்லும் மலைவழிச்சாலையிலும் காட்டுயானைகள் வனப்பகுதியை விட்டு இறங்குவதாலும், சில நேரங்களில் காட்டு யானைகள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டுயானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுவதால் கிராமவாசிகள் உயிர்பயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.



கொடைக்கானலில் காட்டு யானைகள் நடமாட்டம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு


இதனை தொடர்ந்து கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான மோயர் சதுக்கம் சுற்றுலா தலத்தில் நேற்று முன் தினம் ஐந்திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் திடீரென்று  முகாமிட்டு  கடைகளை சேதப்படுத்தியதால் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வனத்துறை தடை விதித்தது, இந்நிலையில் மோயர் சதுக்கத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் தற்போது பைன் மர சோலை பகுதிக்கு இடம் பெயர்ந்து அப்பகுதியில் இருக்கும் பத்துக்கும் மேற்ப்பட்ட கடைகளை சேதப்படுத்தியுள்ளது.



இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மாவட்ட வன அலுவலர் திலீப் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மோயர் சதுக்கம், பைன் மர சோலை உள்ளிட்ட பகுதிகளில்  வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து யானைகளின் நடமாட்டத்தை இரவு மற்றும் பகல் நேரங்களில் கண்காணித்து வருகின்றனர்.



மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம்,பைன் மர சோலை, குணா குகை, பில்லர் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, யானைகள் இடம்பெயர்ந்த பிறகு சுற்றுலா தலங்களுக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.  இதனால் கடந்த இரண்டு நாட்களாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.


 


தேனி : காசிக்கு நிகரான பெரியகோவில், பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..


 


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்: 


 


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!