ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கரையூர்  மீனவ கிராமத்தில் சிறுமிக்க பாலியல் தொல்லை கொடுத்த சிறுமியின் பெரியப்பா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


ராமேஸ்வரம் கரையூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். அதே மீனவ கிராமத்தில் ஆறுமுகத்தின் மனைவியின் தங்கை குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று  காலை ஆறுமுகம் தனது மனைவியின் தங்கை வீட்டிற்கு  வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஆறுமுகத்தின் மனைவியின் தங்கை (கொழுந்தியாள்) மகன் மற்றும் மகள் இருவரும் விளையாடி கொண்டிருந்தனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி மற்றும் சிறுவனிடம் ஆறுமுகம் தனது  வீட்டில் பனை கொட்டை மற்றும் விளையாட்டுப்பொருட்கள் நிறைய  உள்ளது அதனை எடுத்து கொண்டு வந்து உங்கள் வீட்டில் போட்டு விளையாடுங்கள் என கூறி அழைத்து சென்றுள்ளார்.




முதலில் அந்த சிறுவனிடம்  பனங்கொட்டையை  கொடுத்துவிட்டு விட்டு பின் அந்த சிறுமியை  வீட்டுக்குள் அழைத்து சென்று கதவை பூட்டி கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுமி வெகு நேரமாக வீட்டிற்கு வராததால் சிறுமியின் தாய் ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று  வீட்டின் கதவை திறக்கும் போது சிறுமிக்கு ஆறுமுகம் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, இதுகுறித்து சிறுமியின் தாய் ராமேஸ்வரம் அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு தனது பெரியப்பாவே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கரையூர் மீனவ கிராம மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சமீப காலமாக இளம் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம், வசிப்பிடம் அருகே, பயணிக்கும் வாகனம் என பல்வேறு இடங்களில் வயது வித்தியாசமின்றி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்க படுகின்றனர். பெரும்பாலும் தெரிந்த நபர்களாலும் மற்றும் அவர்களின் உறவினர்களாலுமே பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். இதில், 18 வயதுக்கு குறைவான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கைதாகும் நபர்கள் மீது ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்- POCSO)-வின் கீழ் வழக்கு பதிவு செய்யப் படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை விசாரிக்க மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. மாநகர காவல்துறையில் கூடுதல் துணை ஆணையர் தலைமையிலும், மாவட்ட காவல்துறையில் கூடுதல் எஸ்.பி தலைமையிலும் ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு’ உள்ளது. மானபங்கம், பாலியல் தொல்லை, சில்மிஷம், பலாத்காரம் போன்றவை தொடர்பாக பெறப்படும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விசாரிக்கப் படுகிறது. இருப்பினும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடில்லை. எனவே, சிறுமிகளுக்கு இழைக்கப்படும்  கொடுமைகளுக்கு  எதிராக இதைவிட தண்டனைகள் அதிகமாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.